அழகுக் குறிப்புகள் ,Beauty Tips Tamil,Tamil latest Beauty Tips for women & mens in Tamil, makeup tips for womens in tamil, Body care tips in Tamil, Beauty

Loading...

10151868_10153993127605193_1936156846_n

பாதம்:  தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு  பாதங்களை பத்து நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். பாதங்கள் அழகாகும்.

கழுத்து: சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படும். இதைத் தவிர்க்க கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி  பூசி, 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு குளியுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்.

கூந்தல்: தலை முடியை ஜொலிக்க வைக்கும் சக்தி ஆரஞ்சு தோலுக்கு உண்டு. எனவே உலர்ந்த ஆரஞ்சு தோலுடன் வெட்டிவேர், சம்பங்கி விதை, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வாரம் ஒரு முறை இந்தப் பொடியால் தலைக்கு தேய்த்து குளியுங்கள்.  கூந்தல் பளபளப்பாக மாறும்.

முகம்: பழுத்த வாழைப்பழத்தை பாலில் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்பளக்கும். பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  தடவுங்கள். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

உதடு: இன்றைய இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும்.  இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான். இந்த உடல் சூட்டை போக்க ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற  வையுங்கள். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடியுங்கள். அதே போல் இரவில் படுக்கப் போகும் போது  வெண்ணெயை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்துவிடும்.

Loading...
9319
-
94%
Rates : 34