பாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்பதற்காக இல்லையாம், நடிப்பதற்காகவாம்!

Loading...

26-1422250881-nayanthara23445-600

பாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்பதற்காக இல்லையாம், நடிப்பதற்காகவாம்! நயன்தாரா, சாலையோர கடையில் பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுடுயூப்பில் வெளியாகி கலக்கியது. நயன்தாரா காரில் இருந்து இறங்கி வந்து பீர் வாங்குவதை ரகசியமாக படம் பிடித்த யாரோ ஒருவர் இதனை கசியவிட்டதாக தகவல் பரவியது. பரபரப்பாக பேசப்பட்டது. புது சர்ச்சையும் கிளம்பியது. ஆனால் இது நிஜமில்லையாம், ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்திற்காகவே நயன்தாரா ஒயின்ஷாப்பில் பீர் வாங்குவது போல நடித்தாராம்.

கரெக்ட் செய்யும் நயன்தாரா ஏற்கனவே ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா, அப்பாவுக்கும், கணவருக்கும் பீர் வாங்கி கொடுத்து கரெக்ட் செய்வார். இந்த படத்தில் யாருக்காக பீர் வாங்கியிருப்பார் நயன்தாரா? என்று யோசிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

எல்லாம் ஒரு வௌம்பரம்… விஜய் சேதுபதி மீசை, தாடி எடுத்தது செய்தியானது மாதிரி நயன்தாரா பீர் வாங்கியது செய்தியாகிவிட்டது. இதெல்லாம் ஓசியில கெடைக்கிற ஒரு வௌம்பரந்தானே…
26-1422250789-actress-nayanthara-buying-beer-in-public-wine-shop-600
பீர் வாங்கிய நயன் குடிமகன்கள் அதிகம் மொய்க்கும் ஒரு சாலையோர ஒயின்ஷாப் முன்பு திடீரென ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அழகான பெண் இறங்குவதை பார்த்த கடை விற்பனையாளருக்கு அதிர்ச்சி. நயன்தாரா நமது கடைக்கு வருகிறாரே என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே கூலாக 2 கூலிங் பீர் வாங்கி செல்கிறார் நயன்தாரா.

Loading...
1741
-
0%
Rates : 1