ஆரோக்கியமான சருமத்தை பெற பேஸ் பேக்குகள்!!! ,tamil beauty tips for face, tamil beauty tips for oily face

Loading...
23-1421993199-6-tomato-honey-curd
தக்காளி + தேன் + தயிர் ஈரப்பதம் அளிக்கும் குணத்தை கொண்ட தயிரையும் தேனையும், சருமத்தை பளபளக்க வைக்கும் குணத்தை கொண்டுள்ள தக்காளியுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இன்னொரு மாஸ்க்கும் உள்ளது. அனைத்து சரும வகைகளுக்கும் இது சிறந்து செயல்படும். 1 தக்காளியை அரைத்து, அதனை 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிருடன் கலந்து, பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இதனை உங்கள் முகத்தின் மீது தடவி, அதனை 15-20 நிமிடங்களுக்கு காய விடுங்கள். தேனுக்கு பதில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயையும் பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள் வளமையாக உள்ளதால், உங்கள் சருமத்திற்கு இது பொலிவைத் தரும்

23-1421993210-7-avo-curd-olive
அவகேடோ + ஆலிவ் எண்ணெய் + தயிர் வறண்ட மற்றும் சீரற்ற சருமத்தை உடையவர்களுக்கு இந்த பேக் ஒரு வரமாக அமையும். அவகேடோ மற்றும் ஆலிவ் எண்ணெயின் ஈரப்பதம் அளிக்கும் குணம் சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும். வறண்ட சருமத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் தயிர். அரை அவகேடோ பழத்தை எடுத்து, அதனை மசித்திடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிரை கலந்திடுங்கள். இதனை உங்கள் முகத்தின் மீது தடவி, 10-15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். முகத்தை கழுவினால் பிரகாசமான மற்றும் மென்மையான சருமத்தை நீங்கள் பெறலாம்.

23-1421993223-8-appl-curd-honey
ஆப்பிள் + தேன் + தயிர் சருமத்துடன் நட்பு பாவிக்கும் வைட்டமின்களை ஆப்பிள் வளமையாக கொண்டுள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள செத்த அணுக்களை நீக்கவும் இது உதவும். சருமத்திற்கு இதமளிக்கும் குணங்களை கொண்டுள்ள தேன் மற்றும் புத்துணர்வை அளிக்கும் குணங்களை கொண்டுள்ள தயிர் ஆகியவற்றுடன் இதனை கலந்தால், அது உங்கள் சருமத்தின் மீது மாயங்களை நிகழ்த்தும். அதற்கு ஆப்பிள் ஒன்றை எடுத்து, அதன் தோலை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் தேனை கலந்திடவும். இதனை உங்கள் முகத்தின் மீது தடவுங்கள். நன்றாக காய்ந்த பிறகு, முகத்தை அலசிடுங்கள். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், வழுவழுப்பான மற்றும் பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறலாம். இது சிறப்பாக செயல்பட கிரீன் ஆப்பிள் பயன்படுத்தலாம்.

23-1421993234-9-orange-curd

ஆரஞ்சு + தயிர் புத்துயிர், ஈரப்பதம், சுத்தரிப்பு மற்றும் மென்மையாக்கும் குணங்களை கொண்டுள்ள மற்றொரு ஃபேஸ் மாஸ்க்கான இது, அனைத்து சரும வகைகளுக்கும் சிறந்து செயல்படும். ஆரஞ்சு பழத்தின் நன்மைகளைப் பெற அதனை தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் அழகு சாதனமாக சீரான முறையில் பயன்படுத்தலாம். கொஞ்சம் ஆரஞ்சு ஜூஸை தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தின் மீது தடவவும். 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசிடுங்கள். உங்களுக்கு வறண்ட அல்லது பதனிடுதலான சருமம் என்றால், இந்த மாஸ்க்குடன் தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.

Loading...
5776
-
80%
Rates : 15