லிப்ஸ்டிக் போடுவதால் பாதிப்புகள் ,tamil beauty tips

Loading...

ld302

பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை,

விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு

முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!

லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும்.

· கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது.

லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.

குறிப்பு:- லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தை பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட

நேரம் நீடிக்கும்.

· மெட்டாலிக் (ஷிம்மர்):- இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம் ஆனால்

இதைத் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது.

குறிப்பு:- அதிக அளவில் நிறத்தை விரும்பினால், மேட் லிப்ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர்

இதைத் தடவலாம்.

· க்ரீம்:- இதில் அதிக அளவில் கன்டிஷனரும், மாய்ஸ்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு

மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம்.

குறிப்பு:- உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத்

தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.

· மேட்:- ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்ஸ்டிக். இதில்

பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது.

குறிப்பு:- உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட்

லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.

· லாங் லாஸ்ட்டிங்:- அதன் பெயரைப் போலவே, இது 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான

நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும்.

குறிப்பு:- உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.

· லிக்விட்:- திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்ஸ்டிக்குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும்.

நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளாஸ்

தடவலாம்.

குறிப்பு:- இது விரைவில் உலர்ந்துவிடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை.

லிப் பென்ஸில் :- இது உதடுகளை மேலும் அழகாக்குகிறது.

· லிப்ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம்.

· லிப் பென்ஸில் தடவுவதால் லிப்ஸ்டிக் உதடுகளைவிட்டு வெளியே பரவாமல் இருக்கும்.

· உதடுகளைப் பெரிதாக்க உதட்டுக்கு சற்றே வெளியே லிப் பென்ஸிலால் வரைந்து, அதன் பிறகு

லிப்ஸ்டிக் தடவலாம்.

· உதடுகளைச் சிறியதாக்க, உதடுகளில் ஃபவுன்டேஷன் தடவி, உதட்டுக்கு உட்புறம் லிப்

பென்ஸிலால் உதட்டின் வடிவத்தை வரைய வேண்டும். அதற்குள் லிப்ஸ்டிக் தடவலாம்.

லிப்ஸ்டிக் பற்றி சில முக்கிய குறிப்புகள்:-

· உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் வெளீர் நிறங்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· நீங்கள் விரும்பியதைவிட வெளீர் நிறத்தில் உங்கள் லிப்ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று

கருமையான நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு

லிப்ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்ஸ்டிக்குடன் பிரவுன் நிற லிப் பென்ஸில்

பயன்படுத்தலாம்.

· தடவ முடியாத அளவுக்கு லிப்ஸ்டிக் குறைந்துவிட்டால் அதை எரியாமல் மீதமுள்ள

லிப்ஸ்டிக்கை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். ஒன்றுக்கு அதிகமான

லிப்ஸ்டிக்கை இப்படி சேர்த்துவைத்தால் அவற்றை கலந்து புதிய நிறத்தை உருவாக்கலாம்.

· நீங்கள் எப்போது லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலும் உதட்டைவிட்டு அது வெளியே வருகிறது

என்றால் கிளாஸ் மற்றும் க்ரீம் லிப்ஸ்டிக்களைப் பயன்படுத்த வேண்டாம்.

· லிப்ஸ்டிக் மற்றும் பர்ஃப்யூமை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

· கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ்டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது

சுகாதாரமானதல்ல. விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு

ஈடானது.

· தேவைப்பட்டால் கன்னங்களுக்கு ப்ளஷாக லிப்ஸ்டிகை பயன்படுத்தலாம். – See more at: http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=304&Cat=501#sthash.usOysebB.dpuf

Loading...
1714
-
100%
Rates : 1