உங்க குழந்தை எடை குறைவா இருக்கா? அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க

Loading...

 width=

தங்களின் குழந்தை உடல் எடை குறைவாக இருந்தாலோ அல்லது அந்தந்த வயதில் அடைய வேண்டிய இலக்கை அடையாமல் இருந்தாலோ பல பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள்.

WHO தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வளர்ச்சி அட்டவணையைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தையை எங்கே நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் இது ஒரு தேவையற்ற மன அழுத்தமாக தான் இருக்கும். காரணம் தங்களுக்கு எது, எப்போது வேண்டும் என்பது குழந்தைகளுக்கு தெரியும்.

இருப்பினும் நம் பக்கத்து வீட்டு குழந்தைகள் போல நம் குழந்தைகள் உடல் எடை கூடாமல், குறைந்த எடையுடன் இருந்தால் அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பரம்பரைப் பண்பு இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீங்களோ, உங்கள் வாழ்க்கைத் துணையோ, சின்ன வயதில் எலும்பும் தோலுமாக இருந்தால், அதன் தாக்கம் உங்கள் குழந்தைகளிடமும் தென்படலாம்.

இரண்டு வயதை தாண்டிய குழந்தைகளின் உடல் எடை, வருடத்திற்கு 1.5 – 3.0 கிலோ வரை அதிகரிக்கும். அதனால் அதிகமாக எதிர்ப்பார்க்காதீர்கள். உங்கள் அழுத்தத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். குழந்தைக்கு உணவு உண்ணுவதில் கோளாறு இருந்தால், உங்கள் குழந்தைக்கான மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

சில குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள், அல்லது அதிக மெட்டபாலிசத்தை கொண்டிருப்பார்கள். அதனால் நன்றாக சாப்பிட்டாலும் கூட உடல் எடை அவ்வளவாக அதிகரிக்காது. தங்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைத்து அவர்களுக்கு இனிப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அள்ளிக்கொடுத்து பெரிய தவறை பல பெற்றோர்களும் செய்கின்றனர்.

இது ஆரோக்கியமான உணவுகளை உண்ண விடாமல் பசியின்மையை தான் உண்டாக்கும். அதனால் இது சிறந்த தேர்வு கிடையாது. அவர்களின் பசியை எந்த விதத்திலும் பாதிக்காமல், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான உணவு பழக்கத்தில் கூடுதல் கலோரிகளை அதிகரிப்பதற்கான வழிகள் சில உள்ளது. உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க, அவர்களுக்கு அதிகமான கலோரிகளை சேர்த்திட சில பரிந்துரைகள், இதோ!

• உங்கள் குழந்தைக்கு முழு கொழுப்பு பால் மற்றும் தயிரை கொடுங்கள். பாலில் இருந்து ஆடையை எடுத்து விடாதீர்கள். இந்த கூடுதல் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.

• கொஞ்சம் நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் பருப்பு அல்லது காய்கறிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

• பீட்சா, பாஸ்தா மற்றும் சாண்ட்விச்சுகளில் சீஸ் சேர்த்திடுங்கள்.

• சூப், ஜாம் சாண்ட்விச் மற்றும் மசித்த உருளைக்கிழங்குகளில் பாலாடையை சேர்த்துக் கொள்ளலாம். • முழு கொழுப்பு பாலாடையில் செய்யப்பட்ட கீர் அல்லது கேரட் அல்வா போன்ற ஆரோக்கியமான டெசெர்ட்களை கொடுங்கள்.

• குழந்தையின் உணவில் நட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு கொடுக்கும் தானியங்களில் பாதாம் மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நொறுக்குத்தீனியாக கிஸ்மிஸ் கொசுக்கலாம். இட்லி மற்றும் தோசைக்கு கடலை பருப்பு அல்லது தேங்காய் சட்னி கொடுக்கலாம். இருப்பினும் நட்ஸ்களை பொடியாக்கியோ அல்லது தூளாக்கியோ தான கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது அவர்களின் தொண்டையில் அடைத்து விடும் வாய்ப்புகள் உள்ளது.

• குழந்தையின் உணவில் உருளைக்கிழங்கு மற்றும் பிற ஸ்டார்ச் உள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

• நீங்கள் அசைவ உணவை உண்ணுபவரானால், குழந்தையின் உணவில் முட்டைகளையும் கோழிக்கறியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

• உங்கள் குழந்தை பிரியப்பட்டு உண்ண வேண்டும் என்றால் வகை வகையான உணவுகளை குழந்தைக்கு கொடுங்கள். ஒரே வகை உணவை தினமும் கொடுக்காதீர்கள். இதுப்போக, சாப்பாட்டு நேரத்தை இனிமையானதாக மாற்றுங்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நடக்கும் மல்யுத்தமாக அதை மாற்றாதீர்கள்.

தட்டில் உள்ள முழுவதையும் முடிக்க வேண்டும் என உங்கள் குழந்தையை வற்புறுத்தாதீர்கள். ஜங்க் உணவு மற்றும் ஜூஸை கொண்டு உங்கள் குழந்தையின் கலோரிகளை அதிகரிக்க வேண்டும் என மட்டும் நினைக்காதீர்கள்.

நடத்தை மற்றும் வழக்கம்:

• உணவு கொடுத்த பிறகு தண்ணீர் கொடுக்கவும்; உணவருந்தும் போதல்ல. அந்த சின்னஞ்சிறிய வயிற்றை தண்ணீரே நிரப்பி விடும். அதே போல் பால் மற்றும் ஜூஸை நடக்க ஆரம்பிக்கும் குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் கொடுத்தால், சாப்பாட்டு நேரத்தில் அவர்களுக்கு பசியெடுக்காது.

• சாப்பாடு மற்றும் நொறுக்குத்தீனிகளுக்கான நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். சாப்பாடு நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அன்றாட வாழ்க்கையில் அது ஒரு அங்கம் என்பதையும் உங்கள் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

காரிலோ அல்லது தள்ளு வண்டியிலோ செல்லும் போது உணவருந்தினால் சாப்பாட்டின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியாமல் போகும். பயணம் செய்யும் போது கொடுக்க நொறுக்குத் தீனிகளை பயன்படுத்தலாம்.

• உங்கள் குழந்தைகளோடு சேர்ந்து உணவருந்துங்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ணுவதை பார்த்து அவர்களும் அதை கடைப்பிடிப்பார்கள்.

• தொலைக்காட்சியை அனைத்திடுங்கள். வளர்ந்த குழந்தைகளும், பெரியவர்களும் மனம் போன போக்கில் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து உண்ணுவார்கள். ஆனால் சிறிய குழந்தைகளோ தொலைக்காட்சியால் ஈர்க்கப்பட்டு சாப்பிடாமலேயே இருப்பார்கள்.

• இது சற்று எதிர் தன்மையாக தெரியலாம்; ஆனால் உங்கள் குழந்தைக்கு போதிய உடற்பயிற்சி கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஆம், உடற்பயிற்சி கலோரிகளை குறைக்கும், ஆனாலும் கூட நன்றாக உண்ணுவதற்கு குழந்தைக்கு அதிகமாக பசியெடுக்கும்.

• சாப்பாட்டின் இடைவேளைகளில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை அளித்திடுங்கள். குழந்தையின் வயிறு சிறியது. அதனால் எப்போதுமே சாப்பாட்டு நேரத்தில் மட்டுமே அவர்களால் போதிய உணவுகளை உட்கொள்ள முடியாமல் போகலாம். குழந்தைகளின் ஆற்றல் மற்றும் மனநிலையை தக்க வைக்க நொறுக்குத் தீனிகளும் கூட உதவுகிறது.

• தூங்க செல்லும் முன்பு நொறுக்குத் தீனி கொடுங்கள். இந்த நொறுக்குத் தீனி ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதத்தை கொண்டிருந்தால், தூங்கும் போது அந்த ஊட்டச்சத்துக்கள் திசுக்களை வளர்க்கும்.

குழந்தையின் தூக்கம் கெட்டு விடாமல் இருக்க சர்க்கரையை தவிர்க்கவும். இந்த முறையில் உண்ணுவது, கூடுதல் உடல் எடையைப் பெற வேண்டும் என நினைக்கும் குழந்தைகளைத் தவிர, மேலும் பல குழந்தைகளுக்கும் இதர பலன்களையும் அளிக்கும்.

Loading...
5985
-
85%
Rates : 21