இயற்கையான முறையில் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்ற சில டிப்ஸ்…

Loading...
30-lips11-600இன்றைய பெண்கள் அனைவருமே தங்களது உடல் அழகை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முக அழகு பராமரிப்பில் அதிக கவனம் எடுத்துவருகின்றனர். இதன் காரணமாக பல ஒப்பனை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பெண்கள் தங்களது ஒப்பனைப் பொருட்களை தேர்வு செய்யும்போது அவை தரமானதாகவும் சருமத்திற்கு ஏற்புடையதாகவும் இருக்குமாறு தேர்வு செய்யவேண்டும். உங்கள் உதடுகள் மெல்லியதாக இருப்பதை நினைத்து கவலை கொண்டுள்ளீர்களா? இவை அழகாகவும் தடிமனாகவும் இல்லை என்று வருத்தப்படுகின்றீர்களா? இவை அனைத்தையும் சில டிப்ஸ்கள் மூலமாக தீர்க்கலாம். உங்கள் உதட்டை அழகுபடுத்தவும் வடிவமைக்கவும் லிப் இன்ஜெக்க்ஷன் உபயோகிக்கலாம். எனினும், இவை விலை அதிகமாக இருப்பதாகவும் இவற்றால் பல பின்விளைவுகள் ஏற்படுவதாகவும் நிரூபனமாகியுள்ளது. உதடு அறுவை சிகிச்சை மற்றும் அதிக அழகுப்பொருட்களை உபயோகிப்பது போன்றவைகளால் உதடு அழகு அதிகரிக்காது. லிப் இன்ஜெக்ஷன் பயன்படுத்திய உதடுகள் தடிமனாகவும் பிரகாசமாகவும் இருக்கும். ஆனால், இவற்றின் பின்விளைவுகள் கொடுமையானவை.
இயற்கையான முறையில் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்ற சில டிப்ஸ்… எளிய டிப்ஸ்களை கொண்டு இயற்கையான முறையில் உங்கள் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்றலாம்.
இதுவே உங்களை அழகாகக் காட்டும் சிறந்த வழியாகும். உங்கள் அழகை விளக்குவதில் உங்கள் உதடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால், அதனை சிறந்த முறையில் பாதுகாக்கவேண்டும். உங்கள் மெல்லிய உதட்டை தடிமனாக மாற்றும் வழியில் அதிகமாக எதையும் செய்யவேண்டாம். சிறந்த எளிய முறையிலேயே சரிசெய்துவிடலாம். பில்லர் உபயோகித்தல் துளைத்தல் சிகிச்சைகள் போன்றவற்றை செய்ய வேண்டாம்.
ஏனெனில், அவைகளை நாம் திரும்பச் திரும்பச் செய்யவேண்டி இருக்கும். அதனால், இயற்கையான முறையில் மெல்லிய உதடுகளை தடிமனாக்கும் சில எளிய வழிகளைப் பார்க்கலாம். சரியான வளைவுகள் உங்கள் உதட்டிற்கு சரியான அவுட்லைன் கொடுத்தால் அழகாக் காட்சியளிக்கும். உதடுகளை தடிமனாக காண்பிப்பதற்காக சிலர் தவறான வளைவுகளை வரைந்து விடுவார்கள். எனினும், அழகான நேர்த்தியான அவுட்லைன் வரைந்தால் உங்கள் உதடுகள் தடிமனாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். டூத் ப்ரஷ் இது உங்கள் உதடுகளை இயற்கையான முறையில் தடிமனாக்குவதற்கான வழிகளில் ஒன்றாகும்.
உங்கள் டூத் ப்ரஷ் நீங்கள் விரும்பிய மாஜிக்கை செய்யும். ஒப்பனை போடுவதற்கு முன்பு உங்கள் உதடுகளை பிரஷால் தேய்த்து விடுங்கள். இதன்மூலம் உங்கள் உதடுகள் பெரிதாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். மேலும் அழகுப்படுத்த உதட்டுசாயத்தை பயன்படுத்தலாம்.
மாய்ஸ்சுரைசர் உங்கள் உதடுகள் அழகாகவும் பெரிதாகவும் மாற்றுவதற்கு உதடுகளை மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும். அதனால் சிறந்த மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்யுங்கள். உங்கள் உதடுகளை சுற்றி மாய்ஸ்சுரைசர் தடவுங்கள். உங்கள் கைகளிலும் தடவுங்கள். உங்கள் உதடுகளை தவிர்த்து விடாதீர்கள் ஏனெனில், உங்கள் உடம்பில் அதுவும் ஒரு பகுதிதான். இது உங்கள் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்றக்கூடிய இயற்கை வழிகளில் ஒன்றாகும்.
ஸ்கரப் உடல் அழகு பராமரிப்பில் எக்ஸ்போலியேஷன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனை வழக்கமான முறையில் செய்து வரவேண்டும். ஒப்பனை செய்வதற்கு முன்பு உங்கள் மெல்லிய உதடுகளில் உள்ள இறந்த அணுக்களை ஸ்க்ரப் செய்யவேண்டும்.
பிறகு மாயிஸ்ச்சரைசர் தடவ வேண்டும். அழகு குறிப்புகள் உங்கள் உதடுகளைச் சுற்றி கன்சீலர் உபயோகித்து உங்கள் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்றலாம். உதடுகள் முழுவதும் அல்லாமல் உதடுகளின் மத்தியில் மட்டுமே லிப் க்ளாஸ் தடவலாம். இது உங்கள் உதடுகளை பெரிதாகக் காட்ட உதவும்.
சரியான நிறம் ஒப்பனை நேர்த்தியாக அமைவதற்கு நாம் நமது சருமத்திற்கு ஏற்ற ஒப்பனை நிறங்களை தேர்வு செய்வதில் தான் இருக்கின்றது. அடர் நிறங்களை தவிர்த்து மென்நிறங்களை பயன்படுத்தினால் உங்கள் மெல்லிய உதடுகள் பெரிதாகக் காட்சியளிக்கும்.
மென்தால் மாயம் உங்கள் உதடுகளுக்கு லிப் பாம் அல்லது க்ளாஸ் தேர்வு செய்யும் போது மென்தால் உள்ளவைகளாகவே தேர்வு செய்யுங்கள். இது உங்களை உதடுகளை தடிமனாக காட்டும். இது தற்காலிகமான ஒன்று என்றாலும் சிறந்த பலனை அளிக்கும்.

Loading...
1701
-
100%
Rates : 1