கால்களில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

Loading...
imagesffகால் துர்நாற்றமானது மக்களின் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகின்றது. இதை குணப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியம் உள்ளன. கால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தால் பாக்டீரியா காரணமாக நாற்றம் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்சனையை ஒழிக்க சிறந்த தீர்வுகள் வீட்டிலேயே உள்ளன. அதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை தவிர ஹார்மோர் பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவையும் தீர்க்கப்பட்டால் கால் துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க முடியும். ADVERTISEMENT பேக்கிங் சோடா கால் துர்நாற்றத்தை அகற்ற பயன்படுகிறது. தேநீர் பைகள் சிலவற்றை சூடான நீரில் போட்டு, காலை ஊர வைத்தால் கால் துர்நாற்றத்தை போக்க முடியும்.
மேலும் நீருடன் வினிகரைக் கலந்து, அதில் பாதத்தை ஊர வைத்தாலும், கால் துற்நாற்றத்தை அகற்ற முடியும். இதை தவிர பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சோப்புகளாலும் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் கால்களை நீண்ட நேரம் மூடி வைத்திருந்தால் நாற்றம் ஏற்படும். அதிலும் ஷூக்களுக்கு உள்ளே நீண்ட நேரம் சாக்ஸ் அணிந்திருந்தாலும் துற்நாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஏனெனில் பாக்டீரியாவானது ஈரத்தில் வளர்வதால், கால் ஈரத்துடன் இருக்கும் பொழுது, அவை வளர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இத்தகைய துர்நாற்றத்தை வியர்வை சுரப்பிகள் தான் வளர்க்கின்றது. இந்த பாக்டீரியா மூலம் சுரக்கும் ஐசோவலீரிக் (isovaleric) அமிலம் கெட்ட வாசனையை ஏற்படுத்துகின்றன. எனவே இத்தகைய கால் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கு வீட்டிலேயே சில மருத்துவ முறைகளை கையாளலாம்.

Loading...
1047
-
100%
Rates : 3