கூந்தல் அடிக்கடி சிக்கு பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்…

Loading...
25-1385359667-10-frizzyhairஅடிக்கடி சிக்கு பிடிக்கும் கூந்தலைப் பார்த்தால், பொலிவிழந்து அசுத்தமானதாக காட்சியளிக்கும். குறிப்பாக சுருட்டை முடி உள்ளவர்கள் தான், இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். அதுமட்டுமின்றி, சுருட்டை முடி இருந்தால், அதனைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினம்.
மேலும் அதனைப் பராமரிக்க பல்வேறு கெமிக்கல் உள்ள பொருட்களைப் பயன்படுத்தினால், நிறைய செலவுகள் ஆவதோடு, தற்காலிகமாகத் தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சுருட்டை முடி உள்ளவர்களின் கூந்தலில் எண்ணெய் பசையானது விரைவில் நீங்கிவிடுவதால், அதன் தரம் குறைந்து, பல்வேறு கூந்தல் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
ஆகவே சுருட்டை முடி உள்ளவர்களும், அடிக்கடி சிக்கு ஏற்படுபவர்களும், இயற்கை முறையில் கூந்தலை பராமரித்தால், கூந்தலை மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக வாரம் 1-2 முறை தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளித்து வந்தால், கூந்தலை ஆரோக்கியமாகவும் வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளலாம்.
இதனால் கூந்தல் சிக்கு ஏற்படாமல் இருக்கும். இங்கு கூந்தலை சிக்கு அடையாமல் வைத்துக் கொள்வதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, அழகான, மென்மையான கூந்தலைப் பெறுங்கள்.

Loading...
3495
-
75%
Rates : 12