உடற்பருமனை குறைக்க விருப்பமா?

Loading...
loss body weightதற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் பிரச்சினையாகும்.உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் படி, உலகில் மிக வேகமாக பெருகிவரும் ஆபத்தாக, சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பதே உடல் பருமன் எனப்படும் ஒபிஸிட்டி. இது, நேரடி நோயாக கருதப்படாவிட்டாலும், பல்வேறு வியாதிகளுக்குக் காரணமாகிறது என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

‘குண்டாக இருக்கும் நீங்கள் முப்பதே நாட்களில் ஒல்லியாக வேண்டுமா?’ என்பது போன்ற விளம்பரங்களில் உள்ள முகவரிகளை நாடலமா என்றும் சிலர் யோசிப்பதும் உண்டு. தேவையின்றி கஷ்டப் படுவது  நல்லதல்ல. இதோ உங்களுக்கு சில எளிய குறிப்புகள். இதனை பின்பற்றுவதும் மிகவும் சுலபம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

உடல் பருமனின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. நமது உயரத்தின் அளவைப் பொருத்து உடல் எடையும் இருக்க வேண்டும். நமது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுவதும் மிகச் சுலபம்.

நமது உயரத்தின் அளவிலிருந்து 100 செ.மீ. அளவைக் குறைத்தால், அதுதான் சரியான உடலின் எடை. உதாரணத்துக்கு நீங்கள் 155 செ.மீ இருக்கிறீர்கள் எனில், 155-100=60. உங்களுக்கான சரியான எடை 55 கிலோகிராம். இதற்கு அதிகமாக இருந்தால், அதைக் குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டியது அவசியம்.

உடல் பருமனாவதற்கு, உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள குறைபாடு மற்றும்  சரிவர உடற்பயிற்சி செய்யாமை இவை இரண்டும்தான் முக்கிய காரணங்கள். ஹார்மோன் கோளாறு காரணமாகவும், பரம்பரை காரணமாகவும் குண்டாகுபவர்களில் சதவிகிதம் மிகக் குறைவுதான்.

உடல் பருமனைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எடைக் குறைப்பதற்கான பிரத்யேக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்.

உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:

 •  எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
 • தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்பட்டினிக் கிடத்தல் கூடாது
 •  அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦
 • உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
 • இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
 •  எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 • முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
 • குளிர் பானங்களை விதிக்க வேண்டும்.
 • தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)
 •  இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
 • 2அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
 • கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
 • கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள ‘டோன்டு மில்க்’ வகைகளையே பயன்படுத்துங்கள்.
 • சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
 • மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்
Loading...
2522
-
100%
Rates : 5