உடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்!

Loading...
13-1423824674-4waistsymptomsofputtingoverweightஇன்டர்நெட்டும் கணினியும் இதோடு ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையை சுற்றி வளைத்துக் கொண்டதன் பலனாய் நம்மில் பலருக்கும் கிடைத்த வியக்கத்தகுப் பரிசு உடல் பருமன். நம்மில் பலருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறதே தெரிவதில்லை. திடீரென ஒருநாள் நமது பேன்ட் இருக்கமானாலோ, கண்ணாடி முன்பு நின்று தலைவாரும் போது தொந்தி கொஞ்சம் எட்டிப் பார்த்தாலோ தான் நமக்கே தெரிகிறது நமது உடல் பருமன் அதிகரித்துவிட்டது என்று. பொதுவாக ஒரு பழமொழி உண்டு, ” எதையும் உருவாக்குவது கடினம், ஆனால் அழிப்பது சுலபம்” என்று.
இதற்கு பின் மாதிரியாய் அமைவது தான் தொந்தி. தொந்தியை உருவாக்குவது எளிது, ஆனால் குறைப்பது கடினம். எதையும் வரும் முன் காப்பது நன்று என்பதை நாம் ஐந்தாம் வகுப்பு பயிலும் போதே கற்றுக் கொடுத்துவிட்டனர். அதனால், தொந்தி தொங்கட்டும் குறைத்துக் கொள்கிறேன் என்று இருக்காமல். தொந்தி உருவாகும் போதே அதை அறிந்து கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். சரி, தொந்தி வருவதை அறிந்து கொள்ள ஏதாவது ஒரு அறிகுறி இருக்கிறதா? என கேட்கிறீர்களா. ஒன்று இல்லை, பத்து இருக்கிறது. இதை சரியாக அறிந்து நீங்கள் செயல்பட்டாலே தொந்தி வருவதை தடுத்துவிடலாம்.

Loading...
2806
-
83%
Rates : 6