ரோஜா பூவின் 7 அழகு நன்மைகள்! Tamil Beauty Tips

Loading...
13-1423834892-1naturalbeautybenefitsofroseரோஜா காதலை அதிகரிக்க உதவும் என்பது உலகறிந்த விஷயம். ஆனால், அழகை அதிகரிக்கவும் உதவும் என நீங்கள் அறிவீர்களா? ஆம்! ரோஜாவில் உள்ள இயற்கை நற்குணங்கள் உங்கள் சருமம் பொலிவடையவும், சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் வல்லது. உங்கள் சருமம் ரோஜா காம்பின் முட்கள் போல இருந்தாலும், அதை ரோஜா மலரின் இதழ்களைப் போல மென்மையடைய செய்ய ரோஜாவினால் முடியும் என்பது அதன் மருத்துவ குணங்களால் நிரூபிக்கப்பட்டவை ஆகும். காதலுக்கு பெயர் போன ரோமர்கள் அந்த காலத்திலேயே ரோஜாவை அழகு சேர்க்கவும், மருத்துவத்தில் பயன்படுத்தி இருகின்றனர்.
சரும எரிச்சல், சருமம் வறட்சி போன்ற சரும கோளாறுகளுக்கு ரோஜா நல்ல பயன் தருகிறது. ரோஜா மட்டும் இன்றி ரோஜாவினில் இருந்து எடுக்கப்படும் பன்னீரிலும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக பன்னீர் கொண்டு முகம் கழுவி வந்தால் முகத்தில் பருக்களும், வடுக்களும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இனி, ரோஜாவில் இயற்கையாகவே உள்ள அழகிற்கான நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்…

Loading...
1546
-
66%
Rates : 9