பொருத்தமான மேக்கப், Tamil Beauty Tips

Loading...

 

hair_makeup_splகூந்தல்

* பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம்.

* முடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கழுத்தின் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக் கூடிய விதவிதமான கொண்டை, பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.

குட்டை முடி

* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி வாரி கட்டிக் கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.

* அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும்படி வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முழுக்க முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

* குட்டைக் கழுத்து: குதிரை வால் கொண்டை பொருத்தம்.

* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நேராக்கி “சி” வடிவமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள் அழகாக, வித்யாசமாக இருக்கும்.

* நீளமான முடி

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.

* ப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டால் அழகுதான்.

* நீளக் கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக இருக்கும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டை முகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் இருந்து பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக் கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

* சதுரமுகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.

* குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம். ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளுங்கள்.

* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

* எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

பொட்டு

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு அதே நிறத்தில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா நிற உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய, நீட்டப் பொட்டு சூப்பர்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுக்கள் பொருந்தும்.

* நீள முகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுக்கள் வைக்கலாம்.

* ஜீன்ஸ் அணிந்தால்கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.

Loading...
2557
-
100%
Rates : 2