ஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க

Loading...

colorful-eye-makeup

அதிக ஒப்பனை போட்டாலும், ஒப்பனை இல்லாதது மாதிரி இயற்கையாக தோற்றமளிக்க சில வ்ழிமுறைகள் உள்ளன. இதை பின் பற்றினாலே நீங்களும் அழகிதான். அதுவும் இரவு நேரங்களில் தேவதை  போல ஜொலிக்க சுலபமான சில டிப்ஸ்.
1. முதல் படி தோலின் ஈரப்பதம்
இயற்கையான ஒப்பனை போல் தோற்றமளிக்க ஒரு சூட்சும வழி உள்ளது, அதில் நம் சருமத்திற்கு ஏற்ற அதிக எண்ணெய் பசை இல்லாத மாய்ஸரைஸர் முதலில் பயன்படுத்த வேண்டும். இதனால் நம் தோல் வறட்சியாவது தடுக்கப்படும். இதற்கு பிறகு ஒப்பனை போட்டால்  நம் முகம் நிலவு போல ஜொலிக்கும்.
2. கன்சீலர் (கண்களுக்கு கீழே பயன்படுத்தும் ஒரு வகை க்ரீம்)
கண்களுக்கு கீழே உள்ள கருவளையம், முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள் இவற்றை மறைக்க இந்த கன்சீலர் பயன்படுகிறது. இதை பயன்படுத்தும் போது, எந்த மாதிரியான நிறத்தில் கருந்திட்டுக்கள், கருவளையம் உள்ளதோ அதற்கு எதிர்பதமான நிறத்தில் பயன்படுத்தவேண்டும். இப்பொழுது ஊதா நிறத்தில் கருவளையம் இருந்தால் இள ஆரஞ்சு நிற கன்சீலரையும், சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் இருந்தால் பச்சை நிற மாதிரியையும் பயன்படுத்தவும்.
3. இதற்கு பின் பவுண்டேசன் (ஒரு வகை க்ரீம்) பயன்படுத்தவும்
நம் தோலுக்கு ஏற்ற பவுண்டேசனை முதலில் தேர்ந்தடுத்துக் கொள்ளவும். இதை முகத்டில் அப்படியே பயன்படுத்தாமல், சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் அனைத்து பகுதிகளுக்கும், தாடையின் கீழிருந்து மேலாக பரவலாக தடவவும்.
4. ப்ரோன்சர் (ஒரு வகை வெள்ளையான‌ க்ரீம்) பயன்படுத்தவும்
இயற்கையான தோல் பொறுத்து இதை நாம் பயன்படுத்த வேண்டும். பழுப்பு நிற தோலுக்கு இந்த வகையான ப்ரோன்ஸர் க்ரீம் பயன்படும். இது நம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்க பயன்படுகிறது. இது சில தோலுக்கு மட்டுமே பொருந்தும். எனவே இதை எல்லோரும் பயன்படுத முடியாது.
5.  ஒப்பனை பவுடர் (டச் ப்ள்ஸ்) பயன்படுத்தவும்
ஆப்பிள் போன்ற கன்னங்களை பெற இந்த டச் ப்ள்ஸை கொஞ்சமாக பயன்படுத்தவும். இதை அதிகம் பயன்படுத்த கூடாது.சிறிது பயன்படுத்தினாலே போதும், அழகாக ஜொலிக்கவும், ஒப்பனை அதிகம் இல்லதது போலவும் காட்டும். நம் நிறத்துக்கு ஏற்ற நிறத்தை பயன்படுதினால், இன்னும் அழகாக ஜொலிக்கலாம்.

Loading...
3849
-
100%
Rates : 6