மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Loading...

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பொதுவாக கடல் உணவுகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

அதிலும் மீனில் மருத்துவ குணங்கள் ஏராளம்.

மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எந்த வியாதிகளும் நம்மை அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம்.

மேலும் அதிகமாக புரோட்டீன் சத்துகளை கொண்ட மீனில் உள்ள “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது.

இந்த ஆசிட் உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

மீனின் மகத்துவங்கள்

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் கறுப்பு மீன்கள், சாலமன் மீன்கள், இதர துனா போன்ற மீன்கள் சிறந்த பலன் அளிக்கும்.

நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.

மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்.

வெந்தயக்கீரை மீன் குழம்பு

மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும், வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.

5 நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

இதன்பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மருத்துவ குணம் நிறைந்த மீன் குழம்பு ரெடி.

பயன்கள்

இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை தணிப்பதுடன், குளிர்ச்சியடைய செய்யும்.

மூளைக்கும், கண் பார்வைக்கும் இந்த குழம்பு மிகவும் பயனளிக்கிறது.

மேலும் வயிற்றுவலியை போக்க இந்த குழம்பு சிறந்த மருந்து.

மீன் வறுவல்

முதலில் வஞ்சிரம் மீனை நன்கு கழுவி ஆட்காட்டி விரல் நீள அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

அதனை அகற்ற பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிசறவும்.

பின்னர் கான்ஃப்ளவர் மாவு, உப்பு, எலுமிச்சையை பிழிந்து விட்டு அனைத்து மீன் தூண்டுகளின் மீது படுமாறு பிசறவும்.

மீன் துண்டு கலவையை நன்கு மூடி ஃப்ரீசரில் அரை மணிநேரம் வைக்கவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி ஐந்தைந்து துண்டுகளாக போட்டு பொரித்து எடுத்தால், வஞ்சிரம் மீன் பொரியல் தயார்.

பயன்கள்

ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் வராது.

இதை அடிக்கடி சாப்பிடுவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

ஆஸ்துமாவை விரட்ட சிறந்த மருந்து.

Loading...
6253
-
100%
Rates : 7