வீட்டில் இருந்தே உடல் எடை குறைப்பது எப்படி

Loading...

gym-help-reduce-pelvic-muscle-exercises

இந்த பயிற்சி வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சி முறையாகும். எடை குறைய விரும்பும் பெண்களுக்கு இந்த பயிற்சி சிறந்தது. இந்த பயிற்சி செய்ய உடற்பயிற்சி கூடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 30 நிமிடம் செய்தால் போதுமானது.

Exercise can decrease body weight

இந்த பயிற்சி செய்முறை : விரிப்பில் கால்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு டம்ப்பெல்ஸ் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நேராக நிற்கவும். முதலில் படம் A யில் உள்ளபடி நிற்க வேண்டும். பின்னர் படம் B யில் உள்ளபடி நாற்காலியில் உட்காருவதை போல் அமர்ந்து பின் நேராக நிற்க வேண்டும்.

அடுத்து படம் C யில் உள்ளபடி கைகள் இரண்டையும் மேல் நோக்கி தூக்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். ABC இவை அனைத்தும் சேர்ந்தது தான் ஒரு செட். ஆரம்பத்தில் இவ்வாறு 15 முதல் 20 முறை செய்யலாம்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முதல் 40 முறை செய்ய வேண்டும். டம்ப்பெல்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பட்டிலை பயன்படுத்தி இந்த பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சி உடல் முழுவதிற்கும் நல்ல பலன் கொடுப்பதாகும்.

Loading...
6936
-
100%
Rates : 10