பெண்கள் அழகாக இருக்க சில …

Loading...

23-1421993189-5-curd-strawberry

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு செலவழிக்க வேண்டாமா? அதனால் தான் பலரும் தங்கள் பணத்தை அழகு நிலையங்களில் கொட்டுகின்றனர். இன்னும் சிலரோ அழகு பொருட்களை வாங்கி குவிப்பதில் பணத்தை கொட்டுகிறார்கள். ஆனால் சிக்கனமான முறையில் கூட நாம் நம் அழகை மேம்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மை தான்! நம் சமயலறையில் உள்ள சில அருமையான பொருட்களை கொண்டே நாம் நம் அழகை பராமரிக்கலாம். இதற்காக நீங்கள் உங்கள் பணத்தை அழகு பொருட்களின் மீது கொட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. நம் வீட்டில் உள்ள பல பொருட்களை இதற்கு பயன்படுத்தினாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரினால் ஏற்படும் சரும பயன்களைப் பற்றி விரிவாகர் பார்க்கலாம். தயிர் என்ற அருமையான பொருளை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தலாம். பளபளக்கும், ஆரோக்கியமான, அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் சுத்தமான மற்றும் தெளிவான முகத்தைப் பெற வேண்டுமானால், இதோ உங்களுக்கான சில தயிர் ஃபேஸ் பேக்குகள்:

வெறும் தயிர் தயிருடன் சேர்த்து சில அருமையான பொருட்களை கலந்து தயார் செய்யப்படும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் உங்கள் சருமத்திற்கு நன்மையை அளிக்கும். அதனை பார்ப்பதற்கு முன், வெறும் தயிரை மட்டும் கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக்கைப் பற்றி பார்க்கலாம். தயிரில் அதிகளவிலான லாக்டிக் அமிலம் உள்ளது. இது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும் இதில் அதிகமான அளவில் வைட்டமின்களும், கனிமங்களும் அடங்கியுள்ளது. இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு மற்றும் நீர்ச்சத்தையும் அளிக்கும். சரும வெடிப்பு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இதிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் இயற்கையான நிவாரணத்தை அளிக்கும். தயிரை கொண்டு 10 நிமிடங்களுக்கு உங்கள் முகத்தை மசாஜ் செய்து, பின் அலசிடுங்கள். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்கள் நீக்கி, சருமத்தை வலுவளுப்பாக்கும். மேலும் உங்கள் வறண்ட சருமத்தை நீர்ச்சத்துடன் இருக்க வைத்து, சரும துவாரங்களை இறுக்கமாக்கும். இதையெல்லாம் தாண்டி, உங்கள் முகத்திற்கு ஆரோக்கியமான பொழிவை அளிக்கும்.
23-1421993160-2-curd

வெள்ளரிக்காய் + தயிர் வெள்ளரிக்காய் மற்றும் தயிர் கலந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு அளித்திடும் புத்துணர்வு மற்றும் நீர்ச்சத்தை வேறு எதனால் கொடுத்து விட முடியும்? தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்க உதவும். இதுப்போக, பருக்களை எதிர்த்து போராடி, சரும பதனிடுதலையும் நீக்கும். துருவப்பட்ட நற்பதமான வெள்ளரிக்காயை தயிருடன் கலந்து, இந்த எளிய பேக்கை தயார் செய்யுங்கள். இப்போது, இந்த பேக்கை உங்கள் முகத்தின் மீது தடவி விட்டு, 15-20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் முகத்தை குளிர்ந்த நீரில் அலசுங்கள். வேண்டுமானால், கண்களின் மீது இரண்டு துண்டு வெள்ளரியை வைத்துக் கொள்ளலாம்.
23-1421993189-5-curd-strawberry

ஸ்ட்ராபெர்ரி + தயிர் இந்த கலவை சுவைமிக்கதாக தெரியும். ஆனால் இது முகத்திற்கானதே தவிர உண்ணுவதற்கு அல்ல. உங்கள் சருமத்தை பிரகாசமடைய செய்யவும் சுத்தமான நிறத்தைப் பெறவும் இது உதவிடும். உங்கள் சருமத்தை உடனடியாக பளபளக்க வைக்க மசித்த 2 ஸ்ட்ராபெர்ரி பழங்களை 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் நீருடன் கலந்திடுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது தடவுங்கள். 15-20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு இந்த மாஸ்க்கை துடைத்து எடுங்கள். பின் இயற்கையான மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.
Loading...
3406
-
87%
Rates : 8