பத்தே நிமிடங்களில் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்பட

Loading...
10858417_612713902189649_5430668002936210268_n
சில நேரங்களில் காலையில் எழுந்ததும் பலரது முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். அப்படி காலையில் எழுந்து அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் கண்ணாடியை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படாவிட்டால், நமக்கே நம்மை பிடிக்காமல் போகும். மேலும் அப்படியே அலுவலகத்திற்கு சென்றால், அங்குள்ளவர்கள் நன்றாக இருக்கும் போதே என்ன உடல்நிலை சரியில்லையா என்று கேட்பார்கள். இதுவே நம்முடைய அன்றைய நல்ல மனநிலையை கெடுத்துவிடும். ஆகவே நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்பட காலை வேளையில் ஒரு 10 நிமிடம் செலவழித்தால் போதும். அந்த 10 நிமிடங்களில் ஒருசில மந்திரத்தின் மூலம் முகத்தில் புத்துணர்ச்சியை மலரச் செய்யலாம். சரி, இப்போது முகத்தின் பொலிவையும், புத்துணர்ச்சியையும் அதிகரித்து வெளிக்காட்ட உதவும் சில டிப்ஸ்களைப் பார்ப்போம். குறிப்பாக இந்த டிப்ஸ்களை ஏதேனும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் முன் செய்தாலும், முகத்தில் புத்துணர்ச்சியை மலரச் செய்ய முடியும்

எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை ஜூஸை பாலுடன் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை உடன காணலாம்.

டூத் பேஸ்ட் தூங்கி எழுந்து பார்க்கும் போது முகத்தில் பிம்பிள் உள்ளதா? அப்படியெனில் டூத் பேஸ்ட்டை பிம்பிள் மேல் வைத்து, 10 நிமிடம் கழித்து கழுவினால், பிம்பிள் அளவு குறையும்.

க்ரீன் டீ காலையில் க்ரீன் டீ குடித்தீர்களா? அப்படியெனில் அந்த க்ரீன் டீ பையை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த நீர்மத்தை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் முகம் புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.

ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு நல்ல நறுமணத்துடன் இருக்கும்

Loading...
15491
-
87%
Rates : 33