மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

Loading...

16424_1535926356650696_6272421944795517984_n

 

நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது.

சில வினாடிகள் நேரத்தில் தயார் செய்யப்படும் வெங்காயப் பச்சடிக்கு உள்ள சிறப்பே சிறப்புதான்.

வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார். பகல் உணவில் இதை ஒரு அங்கமா எடுத்துக்கிட்டு சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும். இதன் மகத்துவத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்மையில் கிங்ஜார்ஜீ மருத்துவ ஆய்வுக் கழகத்தில் ஆராய்ச்சி செய்தபோது பக்கவாதம் எனப்படும் மூளை, இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தர்றதாக் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.

அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருது. இன்னொரு உண்மை ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்களாம். நீரோ மன்னன் குரல் இனிமைக்காக வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டானாம்.

பொதுவாக வெங்காயத்தை எல்லோரும் பயன்படுத்தலாம். தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கணும். 40 வயதுக்கு மேலே ஆனவர்கள். கண்டிப்பா வாரம் இரண்டு முறையாவது வெங்காயத்தை உணவுல சேர்த்துக்கணும்.

Loading...
3379
-
100%
Rates : 4