கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready

Loading...

01-1364817327-hall-3-600

கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க

கோடையில் சில சமயங்களில் வீட்டில் கூட இருக்க முடியாது. ஏனெனில் வீட்டிற்குள்ளேயே அனலானது அவ்வளவு அடிக்கும். மேலும் வீட்டில் இதுவரை நன்கு அடர்ந்த நிற பெயிண்டை அடித்திருப்போம். வீட்டில் அனல் நென்கு தெரிவதற்கு முக்கிய காரணம், அந்த அடர்ந்த நிற பெயிண்ட் என்றும் சொல்லலாம். ஆகவே தான், பலர் கோடையில் குளிர் பிரதேசங்களுக்கு பிக்னிக் சென்று விடுகின்றனர். ஆனால் அவ்வாறு கோடை வெயிலுக்கு பயந்து, குளிர்பிரதேசம் செல்வதற்கு பதிலாக, வீட்டை எப்படி குளிர்ச்சியுடன் வைப்பது என்று யோசித்தால், பிக்னிக் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

அத்தகைய கடுமையான வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்கு, வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என்று ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, வீட்டை அவ்வாறு அலங்கரித்து வந்தால், வீடு பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, குளிர்ச்சியுடனும் இருக்கும்.


தலையணை மற்றும் குஷன்
வீட்டில் உள்ள தலையணை மற்றும் குஷன்களுக்கு நல்ல அழகான நிறங்களால், தொட்டாலே மென்மையாக இருக்கும் அளவில் கவர்களை போட்டால், நன்றாக இருக்கும்.


அழகான மலர்கள்
வீட்டின் பூ ஜாடிகளில் நல்ல அழகான, கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் உள்ள மலர்களை வைத்து, அலங்கரிக்கலாம். இதனால் அதனை பார்க்கும் போது, எரிச்சலாக இருக்கும் கண்கள் குளிர்ச்சியுடன் இருக்கும்.


வெளியே ஹால் வைக்கலாமே!
கோடையில் வீட்டின் உள்ளே இருப்பதற்கு பதிலாக, தோட்டத்திற்கு அருகில் ஷோபாக்கள் மற்றும் சிறு செடிகளை ஆங்காங்கு வைத்து ஓய்வு எடுத்தால், வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியாது.


மரத்தாலான நாற்காலிகள்
வீட்டின் டைனிங் டேபிளானது மரத்தாலானதாக இருந்தால், அது பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்கும்


திரைச்சீலைகள்
வீட்டின் ஜன்னல்களில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகள், வீட்டின் சுவற்றிற்கு ஏற்றவாறான நிறத்திலும், காட்டன் திரைச்சீலைகளாகவும் இருந்தால், சரியாக இருக்கும்.


பூ போட்ட டிசைன்கள்
பூக்கள் என்றாலே புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே வீட்டின் சுவர், பெட் சீட், குஷன்கள், தலையணைகள், டேபிள் மேட், திரைச்சீலைகள் போன்றவற்றிற்கு பூ போட்ட டிசைன்களின் கவர் போட்டால், நன்றாக காணப்படும்.


வீட்டினுள்ளே வளர்க்கும் செடிகள்
இந்த காலத்தில் வீட்டின் உள்ளே, நன்கு பச்சை பசேலென்று அழகாக செடிகளை வைத்தால், வீடே குளிர்ச்சியாக இருக்கும்.


வீட்டின் உள்ளே சிறு நீர்வீழ்ச்சி
வீட்டை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு செய்யும் செயல்களில் முக்கியமான ஒன்று என்றால் அது வீட்டின் உள்ளேயே சிறு நீர்வீழ்ச்சியை வைப்பது தான். இதனால் வீடே நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்.


சரியான பெயிண்ட்
வீட்டிற்கு வெளிர் நிறத்தில், அதுவும் சூரியக்கதிர்களின் வெப்பத்தை எதிர்க்கும் வகையில் பெயிண்ட் அடிக்க வேண்டும். அதிலும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடித்தால், நன்றாக இருக்கும்.

Loading...
2162
-
100%
Rates : 7