கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்

Loading...

02-darkneck

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை துருவியோ அல்லது சாறு எடுத்தோ அல்லது துண்டுகளாக்கியோ கழுத்தில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், கழுத்தில் உள்ள இறந்த செல்களானது வெளியேறி, கழுத்து வெள்ளையாகும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, கழுத்தில் தடவி 10-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றினை சருமத்திற்கு பயன்படுத்திய உடனேயே வெயிலில் செல்லக்கூடாது.
தேன் மற்றும் தக்காளி தேனில் தக்காளி சாறு, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். Show

பாதாம் பாதாமை பொடி செய்து, அத்துடன் சிறிது பால் பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கருமையாக இருக்கும் இடத்திலும், கழுத்திலும் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய வைட்டமின்கள் கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.
Loading...
6753
-
100%
Rates : 19