நடுத்தர பெண்மணிகளுக்கான அணிகலன்கள்

Loading...

Gold-Collection-BG-Image-900x450

வயது ஏற ஏற பெண்களுக்கான நகைகள் மீதான விருப்பங்கள் மாறுபடுகின்றன. நடுத்தர வயதிலும், அதைக் கடந்து விட்ட பிறகும், மேட்ச்சிங் நகைகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறையும்.

40 வயதை எட்டிவிட்ட பெண்களுகள் முத்தும் தங்கமும் கலந்தது, பவழமும் தங்கமும் கலந்தது, சிவப்பு, பச்சை கலர் மணிகளுடன் தங்கம் கலந்தது என அந்த வயதில் குறிப்பிட்ட சில டிசைன் மற்றும் கலர் காம்பினேஷன்களையே அதிகம் விரும்புவார்கள். எல்லா உடைகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செட்டையே போட விரும்புவார்கள்.

அதிக வேலைப்பாடு செய்யப்பட்ட நகைகளையே, கனமான நகைகளையோ, தொங்கும் காதணிகளையோ அவர்கள் விரும்புவதில்லை. விலை உயர்ந்த கற்கள் பதித்த வட்ட வடிவ தோடும் கூடவே மாட்டலும் அணிய விரும்புவார்கள்..

அட்டிகை மாடலில் நெக்லஸ் அணிவதும் இவர்களுக்குப் பிடிக்கிறது. கருப்பு மற்றும் மெரூன் கலர் கிரிஸ்டல்கள் சேர்த்துக் கோர்த்த கோல்டன் செயின் இந்த வயதுப் பெண்களுக்கு அம்சமாக இருக்கும். மணிகள் அல்லது கிரிஸ்டல் கோர்த்த சற்றே நாகரிகமான நகைகளை அணிய விரும்புவார்கள்.

முத்து கோர்த்த நகைகள் அனைத்து தரப்பு பெண்களும் விரும்புகிறார். ஏனெனில் இது அனைத்து வயதுக்காரர்களுக்குமே ஒருவித கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும் என்பதால், தங்கம் – முத்து காம்பினேஷனையும் பவழம் – முத்து காம்பினேஷனையும் அதிகம் விரும்புகிறார்கள்.

முத்து கோர்த்துச் செய்த நகைகள், காட்டன் மற்றும் பட்டுச் சேலைகள் என இரண்டுக்குமே பொருத்தமாக இருக்கும். சிம்பிளாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் பளிச்சென்றும் தெரிய வேண்டும் என விரும்புவோர் சரடு மாடல் சங்கிலியையே விரும்புகிறார்கள்.

கொஞ்சம் ஆடம்பரமாகக் காட்டிக் கொள்ளவும் கூட்டத்தில் கவனம் ஈர்க்கவும் விரும்புவோர், சிவப்பு மற்றும் வெள்ளை கலர் அட்டிகை மாடல் நெக்லஸ்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சீனியர் சிட்டிசன் வயதை எட்டிய பிறகும்கூட சில பெண்கள் இளமையாகவே தெரிவார்கள்.

மாடர்னாகவும் காட்சியளிக்க விரும்புவார்கள். அவர்கள் பெரும்பாலும் காட்டன் சேலை, அதற்கு மேட்ச்சாக அதே கலரில் மணிகளில் செய்த செட் அணிந்தால் அழகாக இருக்கும். டாலர் வைத்த நீளமான செயினும் இவர்களது விருப்பப் பட்டியலில் உண்டு

Loading...
4946
-
50%
Rates : 2