கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க.,tamil beauty tips

Loading...

11925997_950984081636220_251366097791233608_n

எலுமிச்சை ஃபேஸ் பேக் ஒரு பௌலில் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வெயிலால் கருமையான சருமத்தைப் போக்கலாம்

கோதுமை ஃபேஸ் பேக் ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவில், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான பாலில் கழுவி வந்தாலும், சருமம் பொலிவோடு இருக்கும்
ஒட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுத்து, பின் கழுவ வேண்டும்.

மஞ்சள் ஃபேஸ் பேக் மஞ்சள் கூட சருமத்தின் நிறத்தை சீராக பராமரிக்க உதவுவதோடு, சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பையும் வழங்கும். அதற்கு பெண்கள் அதனைக் கொண்டு தினமும் பூசி குளிப்பதோடு, ஃபேஸ் பேக்காகவும் போடலாம். இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி மாதம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்
Loading...
7294
-
100%
Rates : 10