எடை குறைவதற்கு பார்லி தண்ணீர்

Loading...

how-to-prepare-barley-water-for-weight-loss.1

எப்படி பார்லி தண்ணீரினால் எடையை குறைக்கலாம்? வெளியில் வாங்குவதை விட வீட்டிலேயே தயாரிப்பதுதான் சிறந்தது. மேலும் வெளியில் வாங்கினால் சர்க்க்ரையும், செயற்கை பொருட்களும் அதிகம் கலந்து இருக்கும். பார்லி தண்ணீர் தயாரிக்க, சிறந்த பிராண்ட் பெர்லி ப்ராண்ட் தேர்ந்தெடுக்கவும். இங்கே நீங்களாக‌ பார்லி தண்ணீர் செய்ய எளிய செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பெர்லி ப்ராண்ட் பார்லி 1 கிலோவை நன்கு மிருதுவாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும் (பார்லி ஒரு கப் என்றால் 3 கப் தண்ணீர் சேர்க்கவும்).
இதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
இந்த சுவை பிடிக்கவில்லை என்றால், நீங்கள் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறு அல்லது வெண்ணிலா சாறை சேர்த்துக் கொள்ளலாம்.
இனிப்புக்கு சர்க்கரை 2 தேக்கரண்டி சேர்க்கவும்.
நீங்கள் குளிர்சாதன பெட்டியில் பார்லி தண்ணீரை நீண்ட காலம் சேமித்து வைக்க முடியும். உண்மையில், காய்ந்த‌ பார்லி என்றால் ஒரு ஆண்டு வரை சேமிக்க முடியும். பார்லியை சமைத்த பின், தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். இப்போது இது நன்கு வெந்து மிருதுவாக மற்றும் அளவு பெரியதாக இருக்கும். இதை கஞ்சி வகைகள் மற்றும் குழம்புகள் (காய்கறி சூப்பிற்கு இது முக்கியமாக பயன்படுகிறது), சூப்புகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.
பார்லி தண்ணீர் தயார் செய்ய சில அருமையான வழிகள்:
தேவையான பொருட்கள்:
பின்வரும் பொருட்கள் தேவையான பொருட்கள்:
1 கப் இயற்கையான முத்து பார்லி
5 கப் தண்ணீர்
1/2 அல்லது 1 எலுமிச்சை சாறு
தேன் – 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை
இஞ்சி
சுவைக்கேற்ப உங்களுக்கு தேவையான சாற்றை சேர்த்துக் கொள்ளவும் மறக்காமல்.
செய்முறை:
பார்லி தண்ணீர் தயாரிக்கும் முறையை கற்று கொள்ளுங்கள்:
சுமார் 1.5 லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு பார்லி சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைக்கும் பாத்திரம் குறைந்தது 30 நிமிடங்கள் குறைந்த தீயில் இருக்கட்டும்.
உங்கள் சுவைக்கேற்ப பார்லியின் அளவை நீங்கள் விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். நிறைய பார்லி அளவு வேண்டும் என்றால் நிறைய சேர்க்கவும், குறைவாக வேண்டும் என்றால் குறைவாக சேர்க்கவும்.
இப்பொழுது வேக வைத்த பார்லியை ஆற வைக்கவும்.
இதை வடிகட்டி குளிர்சாதான் பெட்டியில் நிறைய நாட்களுக்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஆனால் தேவையான போது, தேவையான அளவு மட்டும் தயாரிப்பது நல்லது.
எடை குறைவதற்கு இந்த பார்லி தண்ணீர் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது, சுவையாக‌ செய்யவது எப்படி என்று பார்ப்போம்! சில ப்ளேவர் சேர்த்து பார்லி தண்ணீர் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு அதில் பார்லி, பூண்டு, ஒரு கிராம்பு, ஒரு இலவங்கப்பட்டை குச்சி மற்றும் நறுக்கப்பட்ட  இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.
போதுமான தண்ணீர் சேர்த்த பின், தீயை குறைக்கவும். முக்கால் பங்கு நீர் இருக்கும் போது பாத்திரத்தை இறக்கி ஆற வைக்கவும்.
ஆறிய பின் வடிகட்டிக் கொள்ளவும்.
நீங்கள் விரும்பியபடி சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ அருந்தலாம்..
கொதிக்கும் போது எலுமிச்சை அல்லது தேன் சேர்க்க கூடாது, ஏனெனில் அப்படி சேர்த்தால் ஒரு கசப்பான சுவை ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
பார்லி தண்ணீர் ஆறிய‌ பின்னர் அவற்றை நீங்கள் சேர்க்கலாம்.
நீங்கள் சுவைக்காக‌ புதினா இலைகள், ஆரஞ்சு, எலுமிச்சை சாறு அல்லது மற்ற மூலிகை சாறுகளையும் பயன்படுத்தலாம்.
இந்த பார்லி தண்ணீர் தயாரிக்க பல எளிதான வழிகள் உள்ளன.
இப்போது, அப்படி எஞ்சியிருக்கும் பார்லியை பயன்படுத்த விரும்புகிறீர்களா?
ரசங்கள் மற்றும் வேகவைத்த குழம்புகளுக்கு இதை பயன்படுத்த முடியும்.
உங்கள் சாலடுகளுக்கும் இதை சேர்க்கலாம்.
நீங்கள் ஊட்டச்சத்து மிகுந்த இந்த பார்லியை, நாம் மில்க் ஷேக் தயாரிக்கும் போது மிக்சியில் இதையும் சேர்த்து அடித்து பயன் படுத்தலாம்.
சில காய்கறிகள், கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து முஸ்லி செய்யயும் போது பார்லியை பயன்படுத்தலாம்.
எடை இழப்பிற்காக பயன்படுத்தும் பார்லி தண்ணீரினால் கிடைக்கும் நன்மைகள்:
பார்லி தண்ணீரினால் கிடைக்கும் நன்மைகளை பெற, நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 3 டம்ளராவது குடிக்க வேண்டும். இதை குடிப்பதால் எடை மட்டும் குறைவதில்லை, உடலை குளிர்ச்சியாகவும், சிறுநீரகத்தை சுத்தமாகவும், எந்த பிரச்சினையின்றியும் இயங்க வைக்கிறது. தாகம் ஏற்படும் போது, தண்ணீருக்கு பதிலாக பார்லி தண்ணீரை குடித்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.
பார்லி தண்ணீரை எப்படி பயன்படுத்துவது:
நீங்கள் எந்த நேரத்திலும் பார்லி தண்ணீர் குடிக்கலாம். சாதத்திற்கு பதில் பார்லியை பயன்படுத்தலாம், சாதத்தில் இருக்கும் சக்தியை விட அதிக சத்து பார்லியில் உள்ளது. இதில் நார்ச்சத்து நிறைய உள்ளது. பார்லி சாலடுக்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். பார்லியை காலையில் பால் அல்லது பழ சாறுகள் அல்லது சில‌ தானிய வகைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படுத்துவதால் எடையை நன்கு குறைக்கலாம்.
நீங்கள் பார்லியை அப்படியே பயன்படுத்தினாலும் சரி, அல்லது பார்லி தண்ணீராக பயன்படுத்தினாலும் சரி. எந்த வகையிலாவது பயன்படுத்துவதுதான் இங்கு முக்கியம். இதனால் நீங்கள் எடை இழக்க உதவுகிறது! எனவே, உங்கள் உடல் பருமனை எதிர்க்கும் ஒரு நல்ல ஆய்தமாக இது இருக்கிறது.
உங்களுக்கு பார்லி தண்ணீரினால் ஏற்படும் எடை இழப்பின் மகத்துவம் தெரியும் என்றால், கீழே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யு

Loading...
20285
-
92%
Rates : 40