என்னுடைய ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கவில்லை – கமல் விளக்கம்

Loading...

0

மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அதற்காக அவர் சென்னையிலிருந்து மதுரை வந்தபோது, மதுரை விமான நிலையத்தில் வைத்து சிலர் அவரை தாக்க முயன்றனர்.

அவர்களிடமிருந்து சிவகார்த்திகேயனை அவரது பாதுகாவலர்கள் மீட்டு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

நேற்று இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் கமலை சிவகார்த்திகேயன் விமர்சித்ததால் அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு கமலும், சிவகார்த்திகேயனும் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிறகு ஒன்றாகவே விமானத்தில் சென்னை திரும்பினர்.

விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல், சிவகார்த்திகேயனை எனது ரசிகர்கள் தாக்கியதாக கூறுவது உண்மையில்லை. நானும் சிவகார்த்திகேயனும் ஒன்றாகத்தான் மதுரையிலிருந்து வருகிறேnம் என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நன்றாகவே இருக்கிறேன் என்றார்.

சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் சமாதானமாகிப் போனாலும், சிவகார்த்திகேயன் மீதான தாக்குதல் ரசிகர்களின் பொறுப்பற்றத்தன்மையையே காட்டுகிறது

Loading...
569
-
Rates : 0