பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!

Loading...

30-1435653683-1-dairyproduct

பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளாலும், முறையற்ற பராமரிப்பினாலும் பற்கள் எளிதில் சொத்தையாவதோடு, ஈறுகளும் பாதிக்கப்படும்.
பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!! பற்கள் சொத்தையானால் பல் வலி, சாப்பிடும் போது அல்லது எதையேனும் குடிக்கும் போது வலி, குளிர்ச்சியான அல்லது சூடான உணவுகளை உட்கொள்ள முடியாமல் இருக்கது, பற்களில் கருமையான புள்ளிகள் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்! பற்கள் சொத்தையாவதற்கு பைட்டிக் அமிலம் நிறைந்த உணவுகளான தானியங்கள், நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவைகள் தான் காரணம். அதற்காக இவற்றை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இவற்றை உட்கொண்ட பின், நீரால் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில இயற்கை வைத்தியங்கள்! மேலும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை உட்கொண்டு வந்தால், அந்த உணவுகள் பற்களின் மேற்பரப்பில் உள்ள எனாமல் கரையாமல், பற்கள் சொத்தையாமலும், வலிமையோடும் இருக்க உதவும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!
கால்சியம் நிறைந்த உணவுகள் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், பற்கள் சொத்தையாவதைத் தடுக்கலாம். ஏனெனில் பற்கள் மற்றும் தாடைகள் பெரும்பாலும் கால்சியத்தினால் உருவானதே.
கால்சியம் சத்து உடலில் குறைந்தால், ஈறு நோய்கள் மற்றும் பல் சொத்தை போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், சீஸ், பசலைக் கீரை, கேல் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அன்றாடம் எடுத்து வருவது அவசியம்.
மக்னீசியம் நிறைந்த உணவுகள் மக்னீசியம் நிறைந்த உணவுகள் வாயில் அல்கலைனை அதிகரிப்பதோடு, கால்சியத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் டி-யை உடல் உறிஞ்ச உதவும். எனவே மக்னீசியம் நிறைந்த உணவுகளான கீரைகள், பாதாம், பீன்ஸ், மீன், அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை அன்றாடம் உட்கொண்டு வருவது, பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இறைச்சிகள் இறைச்சிகளும் வாயில் அல்கலைன் உற்பத்தியை அதிகரித்து, மிகவும் சக்தி வாய்ந்த பைட்டிக் அமிலத்தை நீர்க்கச் செய்யும். எனவே சிக்கன், மீன், கடல் உணவுகள் போன்ற வைட்டமின் பி12 மற்றும் பி2 நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
வைட்டமின் பி12 மற்றும் பி2 குறைபாடு உள்ளவர்களுக்குத் தான் வாய்ப்புண் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். ஆகவே இறைச்சிகளை சாப்பிட்டு வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
வைட்டமின் டி சூரியக்கதிர்களிடம் இருந்து வைட்டமின் டி கிடைக்கிறது என்று, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ள தவறாதீர்கள். ஏனெனில் உணவின் மூலமும் வைட்டமின் டி-யைப் பெற வேண்டியது அவசியம். எனவே வைட்டமின் டி அதிகம் நிறைந்த சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள், முட்டை, பால் போன்றவற்றையும் தினமும் உட்கொண்டு வாருங்கள்.
நல்ல கொழுப்புக்கள் நல்ல கொழுப்புக்களான ஒமேகா-3 பற்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இத்தகைய ஒமேகா-3 சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, வால்நட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றில் வளமாக நிறைந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றும். அதற்கு உணவில் தேங்காய் எண்ணெயை சேர்க்கலாம் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு பற்களை துலக்கலாம்.
வெண்ணெய் வெண்ணெயில் கால்சியம் வளமாக உள்ளது. பலரும் கொழுப்பு நீக்கப்பட்ட வெண்ணெயைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் கொழுப்புமிக்க வெண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்ற தவறான எண்ணம் இருப்பதாலேயே.
எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவாக உட்கொண்டு வந்தால், அது ஆரோக்கியமானதே. எனவே கொழுப்புமிக்க வெண்ணெயை அளவாக உட்கொண்டு, அதன் முழு நன்மையையும் பெறுங்கள்.
காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொண்டு வந்தால், எச்சிலின் அளவு சீராக இருப்பதோடு, பற்சொத்தை ஏற்படுவதைத் தடுக்கும் கனிம பாதுகாப்புக்களை உற்பத்தி செய்து, பற்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் கேரட், முள்ளங்கி போன்றவற்றை உட்கொள்வது மிகவும் நல்லது.
உப்பு பற்களை துலக்கும் போது தினமும் சிறிது உப்பை டூத் பேஸ்ட் மீது தூவி பற்களை துலக்கி வந்தால், அவை வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பற்களை வெண்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடா வேண்டுமெனில் பேக்கிங் சோடாவை நேரடியாகவோ அல்லது டூத் பேஸ்ட்டுடனோ சேர்த்து பற்களை துலக்கலாம். இதனாலும் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிவதோடு, வாயில் அல்கலைன் அளவை சீராக பராமரித்து, பற்சொத்தை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
Loading...
1428
-
100%
Rates : 1