வீட்டில் வேக்சிங் செய்யும் முறைகள்

Loading...

cccb03d2-d465-4bd7-857e-fb55dcff08a1_S_secvpf.gif

எவ்வளவு தான் அழகு சாதனங்கள் கொண்டு சருமத்தை அழகுப்படுத்தினாலும், சிறிய அளவில் உள்ள ரோமங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்துவிடும். எனவே அனைவரும் அத்தகைய ரோமங்களை நீக்கவே விரும்புவர்.

அதற்காக உபயோகிக்கும் முறை தான், மெழுகினால் முடி நீக்கம் செய்யபடும் வேக்சிங். வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை பிடிக்கும். பாதிப்பு இல்லாத வகையில் வேக்சிங் செய்யும் முறைகளை பார்க்கலாம்.

* முதலில் சரும வகைக்கு ஏற்ற மெழுகினை (wax) வாங்க வேண்டும்.

* அவ்வாறு வாங்கும் மெழுகை மெலிதாக சூடேற்ற வேண்டும். அதிக அளவில் சூடுபடுத்தக் கூடாது. ஏனெனில் அது தீக்காயங்களை உண்டாக்கிவிடும்.

* பின்பு கை கால்களை கழுவி, சுத்தப்படுத்தி உலர வைக்க வேண்டும்.

* அடுத்து சூடாக்கிய மெழுகு குளிரும் முன்பு, வெதுவெதுப்பாக நிலையில் கால்களில் முடி வளரும் திசையை நோக்கி, அதை தடவ வேண்டும்.

* இப்போது பருத்தி துணி அல்லது காகிதத் துண்டை எடுத்து, மெழுகு தடவிய பகுதிகளில் வைத்து, மெழுகு சிறிது குளிரும் வரையில் அழுத்த வேண்டும்.

* பின்னர் மெழுகின் மேல் வைத்துள்ள துணி அல்லது காகிதத்தை முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் நீக்க வேண்டும்.

* இவ்வாறு முடி நீக்கப்பட்ட பின்பு, அந்த இடத்தில் ஒரு ஈர துணியை வைக்க ஒத்தடம் கொடுக்கும் படி வைக்க வேண்டும்.

* மேலே கூறப்பட்ட படிநிலைகளை சருமத்தில் உள்ள முடி முழுவதும் நீங்கும் வரை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

* அவ்வாறு நீக்கிய பின் மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக முகம் மற்றும் புருவங்களை நீக்க செய்யப்படும் வேக்சிங்கை, அழகு நிலையங்களில் செய்வதே சிறந்தது. வீட்டில் செய்ய நினைப்பது அவ்வளவு நல்லதல்ல.

* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாதவர்கள் வேக்சிங் செய்யக்கூடாது.

* மரு, முகப்பரு மற்றும் வேனிற்கட்டிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேக்ஸ் செய்யக்கூடாது.

* சீரற்ற சருமம் அல்லது வீங்கமடைந்து வலிக்கும் நிலையில் உள்ள நரம்புகள் மீது மெழுகை தடவ வேண்டாம்.

Loading...
3286
-
100%
Rates : 6