உடல் பருமனாக – ஆயுர்வேதத்தில் இருக்கு ரகசியம் !

Loading...

12745716_489783661207640_8487274628767399569_n

நன்கு பசித்தபின் உண்பர்வர்களுக்கு உண்ணும் உணவின் சத்து முழுவதுமாக உடலில் சேர்ந்து உடலில் பலம் நீண்ட நாள்கள் குறையாமல் இருக்கும். வாய் முதல் குடல் இறுதிப்பகுதியான ஆசனவாய் வரை சுத்தமாக இருப்பதற்கும் நல்ல ஜீர்ணசக்தியைப் பெறுவதற்கும் கீழ்க்காணும் மருந்தை முதலில் சிறிது காலம் சாப்பிடவும். கடுக்காய்த் தோல் – 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு இவை தலா 3 கிராம்.திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாக இடித்தச் சூர்ணம் செய்து துணியினால் சலித்து வைத்துக் கொள்ளவும்.

அளவு அரை கிராம். தேனில் குழைத்தோ அல்லது வெறும் வெந்நீருடனோ கலக்கிச் சாப்பிடலாம். பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் முதலிய அஜீர்ண நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து.நல்ல ஜீரண சக்தியும் குடல் சுத்தியும் ஏற்பட்டுவிட்டால் காலை உணவிற்கு கோதுமைக் கஞ்சி, சோளப்பொரி, கோதுமைப் பொரி கஞ்சி, பால் அல்லது தயிர் சேர்த்துச் சாப்பிடவும். இட்லி, தோசை போன்ற மாவுப் பலகாரங்கள் காலை உணவிற்கு ஏற்றவை அல்ல.

மதிய உணவிற்கு நெய் சேர்த்த சூடான பருப்புச் சாதம், மோர்க்குழம்பு, நன்கு வேகவைத்த காய்கறிகள், மிளகு ரசம், பிறகு தயிர்சாதம், நார்த்தங்காய் வற்றலுடன் சாப்பிடவும்.மாலையில் நேந்திரம் வாழைப்பழத்தைக் குக்கரில் வேகவைத்துத் தேன், நெய், சர்க்கரை சிறிது கலந்து சாப்பிடவும். பிறகு சிறிது பசும் பால் அருந்தவும். இரவில் கேழ்வரகு மாவைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் முதலில் கலந்து கலக்கி அடுப்பில் ஒரு கொதி வரும் அளவு காய்ச்சி இறக்கி பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். இது பசியைத் தூண்டிவிடும். உடலுக்குப் புஷ்டியைத் தரும். ருசியில் இனிப்பான ஒரு சிறந்த உணவு.

 

Loading...
6203
-
77%
Rates : 9