வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

Loading...

dd68c384-7156-4a18-9954-15f33410b463_S_secvpf.gif

முதலில் சேரில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகளை மேலே நேராக நீட்ட வேண்டும். உள்ளங்கையை எதிரே இருப்பவருக்குத் தெரிவது போல வைக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும்.

இப்போது, மெதுவாக, உடலை வளைத்து, கைகளைப் பாதத்துக்கு முன்பும், பிறகு பக்கவாட்டிலும் பதிக்க வேண்டும். பிறகு, கைகளை மடக்காமல் அப்படியே நிமிர்ந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை ஐந்து முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: அடி வயிறு அழுத்தப்படுவதால், வயிறு வலுப்பெறும். மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். நரம்பு மண்டலத்தைச் சீராகச் செயல்படவைக்கும்

Loading...
4281
-
100%
Rates : 8