நடிகையின் அழகும் இளமையின் ரகசியம்…

Loading...

kajol-500x500

கண்ணழகியான நடிகை கஜோல் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் மற்றும் அழகுடனும் காட்சியளிப்பதைக் கண்டு வியக்கிறீர்களா? அவர் இவ்வளவு இளமையுடன் காட்சியளிப்பதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இவரது பிறந்தநாளான இன்று அவரது அழகு ரகசியத்தை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது.

நடிகை கஜோல் இன்று தனது 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சற்றும் உடல் எடை அதிகரிக்காமல், ஸ்லிம்மாகவும், பலரும் சைட் அடிக்கும் வகையில் இருப்பதற்கு காரணம், அவரது பழக்கவழக்கங்கள் தான். சரி, இப்போது நடிகை கஜோல் இன்னும் இளமையுடன் காட்சியளிப்பதற்கான ரகசியத்தைக் காணலாம்.

அளவான மேக்கப்
கஜோல் அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டு பார்த்திருக்க முடியாது. எப்போதும் இயற்கையான தோற்றத்தில், உதடுகளுக்கு நியூட் நிற லிப் கிளாஸ், அளவான ஃபவுண்டேஷன் போடுவதோடு, தவறாமல் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவார்.

கண்களுக்கான மேக்கப்
கஜோலின் அழகே அவரது கண்கள் தான். அத்தகயை கண்களை அழகாக வெளிக்காட்ட கஜோல் எப்போதும் காஜலை அளவாக தடவிக் கொள்வார். அதுமட்டுமின்றி, எப்போதும் ஐ-லைனர் மற்றும் ஐ-ஷேடோவை அளவாகத் தான் பயன்படுத்துவார். மேலும் சில நேரங்களில், அதுவும் கண்களுக்கு மட்டுமே அதிக மேக்கப் போடுவார். ஆனால் பெரும்பாலும் கண்களுக்கு அளவான மேக்கப்பைத் தான் போடுவார்.

ஃபிட்னஸ் மிகவும் முக்கியம்
கஜோல் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கமாட்டாராம். ஆனால் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிப்பாராம். முக்கியமாக எப்போதும் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம் என்று கருதுவாராம்.

ஆரோக்கியமான டயட்டுடன் உடற்பயிற்சி
கஜோல் ஆரோக்கியமான டயட்டுடன், உடற்பயிற்சியையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று நம்புபவர். ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ளாமல், அழகான சருமம் மற்றும் கட்டுடல் மேனியைப் பெற முடியாது என்பார். அதற்காக அவர் அனைத்து வகையான ஆரோக்கியமான உணவுப் பொருட்களையும் உண்பார். அத்துடன் தினமும் 90 நிமிடங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வாராம்.

தூக்கம் அவசியம்
கஜோலைப் பொறுத்தவரை, அழகு, ஆரோக்கியம் என்று வரும் போது, அதற்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாம். ஒருவர் உடலளவில் ஃபிட்டாக இருந்தால், மனதளவில் தானாக ஃபிட்டாக இருக்க முடியுமாம். மனதளவில் ஃபிட்டாக இருந்தால், தன்னம்பிக்கை அதிகரித்து, அதன் மூலம் அழகாக இருப்பதை உணரலாம் என்றும் கூறுகிறார். அதனால் அவர் தினமும் தவறாமல் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்வாராம்.

தண்ணீர்
தண்ணீர் மிகவும் முக்கியமான ஓர் பானம். தண்ணீர் தான் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. எனவே அந்த தண்ணீரை தினமும் தவறாமல் அதிக அளவில் குடிக்க வேண்டியது அவசியம். மேலும் தன் அழகின் ரகசியத்தில் ஒன்றாக தண்ணீர் அதிகம் குடிப்பதைக் கூறுகிறார்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
கஜோல் தனது டயட்டில் 50 பழங்கள் மற்றம் காய்கறிகள் தான் இருக்குமாம். இவை தான் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை வழங்கி, பொலிவான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தை வழங்குகிறது என்றும் கூறுகிறார்.

Loading...
10233
-
80%
Rates : 25