முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவது எப்படி?

Loading...

howtogetridofsaggingface-15-1450158638

நல்ல பொலிவான மற்றும் புத்துணர்ச்சியான சருமம் தான் நம்மை அழகாக வெளிக்காட்டும். ஆனால் தற்போதைய மாசுபாடு நிறைந்த சூழ்நிலையில் சருமத்துளைகளில் மற்றும் உடலில் அழுக்குகள் தங்கி, அதனால் முகத்தின் அழகு பாழாகிறது. குறிப்பாக சருமத்தில் சுருக்கங்கள் அதிகரித்து, சருமம் தளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.

ஆகவே இதனைத் தவிர்க்க வேண்டுமானால், முகத்திற்கு போதிய பராமரிப்புக்களுடன், அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட வேண்டும். அதுமட்டுமின்றி ஒருசில முகத்திற்கான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வர வேண்டும். இங்கு முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, முகச்சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்வதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் அழகுடன் திகழலாம்.

தயிர் மற்றும் கற்றாழை ஜெல் மாஸ்க்

இந்த மாஸ்க் சருமத்தை இறுக்கி, சுருக்கத்தை மறைக்கும். அதற்கு 4 டேபிள் ஸ்பூன் தயிரில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், சரும செல்கள் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

அவகேடோ மற்றும் தேன் மாஸ்க்

நன்கு கனிந்த அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் மறையும்.

ஃபேஷியல் பயிற்சி

இது முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி. இந்த பயிற்சியை தினமும் செய்வதன் மூலம், முகத்தில் தளர்ந்துள்ள பகுதியை வலிமையடையச் செய்து சரிசெய்யலாம். அதற்கு படத்தில் காட்டியவாறு சிரித்தவாறு, கன்னப்பகுதியை மேலே இழுந்து 10 நொடிகள் பிடித்து, பின் ரிலீஸ் செய்யுங்கள். இதுப்போன்று 5 முறை தினமும் செய்து வாருங்கள்.

மற்றொரு ஃபேஷியல் பயிற்சி

வாயினுள் காற்றினை நிரப்பி 10 நொடிகள் வைத்து பின் ரிலீஸ் செய்ய வேண்டும். இப்படி 5 முறை தினமும் செய்து வர வேண்டும். அதுமட்டுமின்றி, முகம் மற்றும் கன்னப்பகுதியில் எண்ணெய் தடவி இரு கைகளாலும் வட்ட சுழற்சியில் 3 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

முட்டை மாஸ்க்

முட்டையின் வெள்ளைக்கருவில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, நன்கு அடித்து, முகத்தில தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, சரும தசைகள் வலிமைப் பெறும். மேலும் சருமமும் மென்மையாக, தளராமல் இருக்கும்.

ஜூஸ்கள்

வெறும் முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால் மட்டும் போதாது. உடலினுள் உள்ள அழுக்குகளையும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, திராட்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை உட்கொண்டு, உடலை சுத்தப்படுத்த வேண்டும்.

வெள்ளரிக்காய் மாஸ்க்

வெள்ளரிக்காயை வட்ட துண்டுகளாக வெட்டி அல்லது அவற்றை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, முகத்தில் உள்ள வீக்கம் குறைந்து, முகம் பளிச்சென்று காணப்படும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம்

Loading...
4794
-
100%
Rates : 8