கோடையில் ஏற்படும் முடி உதிர்தலைத் தடுக்க சிம்பிளான சில வழிகள்

Loading...

11-1402468349-6oilinghair-300x225-615x461-300x225

கோடையில் உங்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறதா? இதற்காக பலவற்றை முயற்சித்திருக்கிறீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப்பாடில்லையா? கவலைப்படாதீர்கள்,
இங்கு முடி உதிர்தலைத் தடுக்கும் சிம்பிளான சில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

கோடையில் அதிகமாக வெயில் அடிப்பதால், அதிக அளவில் வியர்த்து, மயிர்கால்கள் அதிகமாக ஈரப்பதத்துடன் இருப்பதால் தளர்ந்து, கொட்ட ஆரம்பிக்கிறது. மேலும் முடி உதிர்தலானது ஒருசில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். ஆகவே முடி உதிர்ந்தால், அதனை நிறுத்துவதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள், ஜெல்களை வாங்கிப் பயன்படுத்தாமல், அதனை தடுத்து நிறுத்த இயற்கையாக என்ன வழி உள்ளது என்று யோசியுங்கள்.

சரி, இப்போது முடி உதிர்வதைத் தடுக்கும் சில சிம்பிளான வழிகள் என்னவென்று பார்ப்பபோம்.

ஆயில் மசாஜ்

வாரம் ஒருமுறை வெதுவெதுப்பாக நல்லெண்ணெயை சூடேற்றி, அதனைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் சீகைக்காய் அல்லது ஷாம்பு போட்டு தலை முடியை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும். மேலும் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம், மன அழுத்தமும் நீங்கும்.

இயற்கை பொருட்கள்

எப்போது முடி உதிர்தல் ஏற்பட்டாலும், கெமிக்கல் பொருட்களின் உதவியை நாடுவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களின் உதவியை நாடினால், முடி உதிர்வது குறைய நாட்களானாலும், முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் தேங்காய் பால் கொண்டு முடியை மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலம் முடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

ஜூஸ்

அருகம்புல் ஜூஸ் அல்லது கற்றாழை ஜூஸைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், தலையில் ஏற்படும் வறட்சி நீங்குவதோடு, முடியின் வளர்ச்சி அதிகரித்து, முடி மென்மையாக இருக்கும். அதிலும் இந்த ஜூஸ்களைக் கொண்டு வாரம் இரண்டு முறை முடியைப் பராமரித்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

டயட்

உண்ணும் உணவுகள் கூட முடி உதிர்வதைத் தடுக்கும். எனவே நட்ஸ், பால், பச்சை இலைக் காய்கறிகள், முட்டை மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். இதனால் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது நின்று, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

முடி பராமரிப்பு முறையை மாற்றவும்

உங்களுக்கு முடி உதிர்தல் அதிகம் இருந்தால், முடியை பராமரிக்கும் முறையில் சிறு மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். உதாரணமாக, மைல்டு ஷாம்புவான பேபி ஷாம்பு கூட பயன்படுத்தலாம் அல்லது பெரிய பற்களைக் கொண்ட சீப்பைப் பயன்படுத்தலாம். வெளியே செல்லும் போது தலையில் துணியைக் கட்டிக் கொண்டு செல்லவும். இதனால் முடி உதிர்வது குறைய வாய்ப்புள்ளது.

நீர் அவசியம்

கோடையில் உடலின் நீர்ச்சத்து குறைவதால், தினமும் தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இப்படி தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள செல்கள் தண்ணீரை உடனே உறிஞ்சிக் கொண்டு, மயிர்கால்களை வறட்சியடையாமல் பாதுகாக்கும். மேலும் தண்ணீர் குடிப்பதால், முடி பிரச்சனைகள் பலவற்றைத் தடுக்கலாம்.

Loading...
5240
-
88%
Rates : 18