குண்டு பூசணிக்காயா நீங்கள்? இதோ இயற்கை அளித்துள்ள உணவுகள்

Loading...

kud

இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குதவற்கு உடல் பருமனும் ஒருவித காரணமாகிவிட்டது.

 

ஆனால், அந்த உடல்பருமனை குறைப்பதற்கு போதிய வழிமுறைகளை பின்பற்றாமல்,சமையலறைக்கும், வீட்டின் அறைக்கும் நடந்துகொண்டிருப்போம்.

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், இயற்கை நமக்கு அளித்துள்ள உணவு முறையை பின்பற்றினாலே போதும்.

வழிமுறைகள்

சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளை தவிர்த்து தினமும் ஐந்து கப்காய்கறி அல்லது பழம் சாப்பிடவேண்டும்.

கீரை, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும், கிழங்கு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பழங்களை சாப்பிடவேண்டும். ஆனால், மாம்பழம், பலாப்பழம் குறைந்த அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

இரவில்உணவுக்கு பின், துாங்க செல்வதற்குமுன், பால் அருந்துவதை தவிர்க்கவேண்டும். உணவில் தேங்காய் பயன்பாட்டைஅறவே குறைக்க வேண்டும்.

பப்பாளிக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கியை அதிகளவு சேர்த்துக் கொள்வதும்நல்லது.

இஞ்சியை இடித்து சாறு எடுத்து, அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். சாறுசற்று சுண்டியதும், தேன் விட்டு சிறிதுநேரம் கழித்து இறக்கி, ஆறவைக்க வேண்டும்.

காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும்,மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு,வெந்நீர் அருந்தி வந்தால், 40நாளில் தொப்பை இருந்த இடம்தெரியாது.

வாழைத்தண்டு சாறு, பூசணி சாறு,அருகம்புல் சாறு; மூன்றில், ஏதாவதுஒன்றை தினமும் குடித்து வந்தால்,உடல் எடை குறையும்.

இதற்கிடையில், தினமும் காலையில் அல்லது மாலையில் அல்லது இரு வேளைகளிலும், அரை மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டால் போதும்.

Loading...
6468
-
76%
Rates : 13