வறண்ட சருமத்திற்கான இயற்கை அழகு குறிப்புகள்

Loading...

201604220718001520_Natural-beauty-tips-for-dry-skin_SECVPF.gif

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் மிகவும் கறுத்து களையிழந்து காணப்படும். இதற்குக் காரணம் இவர்களின் உணவு முறையே. வறட்சியான சருமம் கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். இவர்கள் உணவில் அதிகம் புளி, தக்காளி போன்ற புளிப்புச் சுவையை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் பளபளக்க சில வழிமுறைகள் இதோ…

வெண்டைக்காய் பிஞ்சு – 2
கேரட் – 1

இவற்றை எடுத்து நறுக்கி தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் எங்கும் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வறண்ட சருமம் பொலிவடையும்.

* செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.

* அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.

* வறட்சியான சருமம் கொண்டவர்கள் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* சருமத்தை வறட்சியுறச் செய்யும் குளியல் சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது.

* பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் மிதமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

Loading...
1392
-
100%
Rates : 2