அழகு தரும் நலங்கு மாவு :

Loading...

13442231_1119057731450334_3735680479216783360_n

இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை உபயோகிப்பது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை என்பது நன்மை தரும் செய்தி.

பிறந்த குழந்தைகளுக்கு நலங்குமாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படுகிறது.

1800385_989384421137109_3002006487521237105_n

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

கடலைப் பருப்பு – 50 கிராம்

பாசிப் பருப்பு – 50 கிராம்

வசம்பு – 50 கிராம்

ரோஜா மொக்கு – 50 கிராம்

சீயக்காய் – 50 கிராம்

அரப்புத் தூள் – 50 கிராம்

வெட்டி வேர் – 50 கிராம்

விலாமிச்சை வேர் – 50 கிராம்

நன்னாரி வேர் – 50 கிராம்

கோரைக் கிழங்கு – 50 கிராம்

பூலாங்கிழங்கு – 50 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்

மஞ்சள் – 50 கிராம்

ஆவாரம்பூ – 50 கிராம்

வெந்தயம் – 50 கிராம்

பூவந்திக்கொட்டை – 50 கிராம்

செய்முறை :
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும்.

பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.

குறிப்பு:
நலங்கு மாவு தயார் செய்ய தேவையான மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.

ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளலாம்.

 

Loading...
4789
-
100%
Rates : 4