ஏழே நாட்களில் சிகப்பழகை பெற சூப்பர் டிப்ஸ்

Loading...

13407044_10156977849585137_1238697458180284907_n

அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும்.

அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.

முகத்தில் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பலவகையான பாதிப்புகள் ஏற்படும்.

கிரீம்கள் இல்லாமல் 7 நாட்களுக்குள் இயற்கையான முறையில் உங்களது தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும், அதாவது இவைகள் தோலின் மெலனின் உற்பத்தியை குறைத்து பிரகாசமான நிறத்தை அடைய உதவுகின்றது.

ஆப்பிள் கிரீம்

ஆப்பிளில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (AHA) தோலின் நிறத்தை அதிகரிக்கிறது.

தோல் உரிக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகளை பாலில் 20 நிமிடங்கள் ஊற வைத்து ஒரு க்ரீம் பேஸ்ட் கலவையாக்க வேண்டும்.

இதனுடன் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி கலந்து பேஸ்ட் போல் ஆனவுடன் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும்.

தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து பனிக்கட்டி கொண்டு மசாஜ் செய்ய முகம் நல்ல பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

குளிர்ந்த ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாறு உங்கள் தோலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதனை ஒரு இயற்கை டோனராக பயன்படுத்தலாம். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ கரும்புள்ளிகளை குறைத்து தோலின் நிறத்தை கூட்டுகின்றது.

3 தேக்கரண்டி குளிர்ந்த ஆரஞ்சு சாறில் பஞ்சை நனைத்து முகத்தில் மெதுவாக துடைத்து, 5 முதல் 7 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

தக்காளி

அரை பழுத்த தக்காளியை கூழாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் தேனை கலந்து, முகம், கழுத்தில் பூசி 5 நிமிடங்கள் கழித்து கழுவ எண்ணெய் வழியும் சருமம் மாறும்.

பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய்

பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து அதனுடன் பால் கிரீம் ஒரு தேக்கரண்டி கலந்து முகம், கழுத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவ, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று மாறும்.

Loading...
11199
-
87%
Rates : 16