சருமம் மிருதுவாக மாற ஸ்க்ரப் சிகிச்சை!

Loading...

625.0.560.320.500.400.194.800.668.160.90

கண்களுக்கு தெரியாத, செதில் செதிலான இறந்தசெல்களை நீக்க உதவுவது ஸ்க்ரப். சொரசொரப்பான கலவையைத் தயாரித்து, அதை முகம், கழுத்து,கை, கால்களில் பூசி, மென்மையாக மசாஜ் செய்வதே ஸ்க்ரப் என்ற சிகிச்சை.

நவரா அரிசி, பாதாமை ஊறவைத்து,பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்கவேண்டும். கொரகொரப்பான இந்தக் கலவையை முகம், கழுத்தில் பூசி மசாஜ் செய்யவேண்டும்.

குறிப்பாக,மூக்கு ஓரங்கள், முன் நெற்றி, இதழ்களின்கீழே அழுத்தித் தேய்க்க, சின்னச்சின்ன குருத்துகள் நீங்கும்.

பலன்கள்

கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளிகள் நீங்கும். இறந்த செல்கள், பருக்களின் மிச்சங்கள் நீங்கிவிடும். சருமம் மிருதுவாக, பளிச் என மாறும்.

Loading...
2449
-
Rates : 0