பளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்

Loading...

உங்கள்-உடம்பில்-என்னென்ன-நோய்கள்-உள்ளன-இதோ-காட்டிக்கொடுக்கும்-நகங்கள்

பெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை அழகுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.

நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும்.

  • நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால், அவை உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது வெட்டுவதை தவிருங்கள்.
  • நகத்தின் மேல் பேஸ்கோட் தடவி அதன் மேல் விரும்பும் நிறத்தில் நகச்சாயத்தை இரண்டு முறை தடவ வேண்டும். அ‌ப்போதுதா‌ன் ‌நிற‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி அழகாக இரு‌க்கு‌ம்.
  • தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • சிலருக்கு நகங்கள் வளராமல் குட்டையாக இருக்கும். அவர்கள் மாதம் ஒருமுறையாவது, பெடிக்யூர், மெனிக்யூர் செய்து கொள்ளவேண்டும். கை, கால்களை நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் நகம் நன்றாக வளரும்.
  • வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவேண்டும். அதில் நகமும், கைகளும் நன்றாக மூழ்கும் படி ஊறவைக்கவேண்டும். இது கைகளும், நகமும் வறட்சியடைவதை தடுக்கும்.
  • நகங்கள் பளபளப்பாக இருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி நகங்களில் மசாஜ் செய்யலாம்.
  • புதினா இலை எண்ணை கொண்டு மசாஜ் செய்தால் நகத்தை சுற்றி ஏற்படும் வீக்கம், வலியை குணமாகும்.
  • இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
  • எலுமிச்சை ஆரஞ்சு பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி சிட்டிகை உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து தொடர்ந்து நகங்களில் தடவினால் பளபளப்பு கூடும்.
  • தினமும் நெயில் பாலிஸ் போடுவது கூடாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நாட்களாவது இடைவெளி விடும்போதுதான் நகத்தின் உண்மை தன்மையை அறிய முடியும்.
Loading...
2209
-
100%
Rates : 1