திருமணத்தில் “லெஹெங்கா” ஆடையில் கலக்கிய நட்சத்திரங்கள்

Loading...

download (4)

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்,

அந்நாளில் நீங்கள் அனைவரின் பார்வைக்கும் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும், உங்கள் சிகை அலங்காரம், முக ஒப்பனைகள், ஆடை அலங்காரம் என ஒவ்வொன்றிலும் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக ஆடை விடயத்தில் உங்கள் தெரிவு சரியானதாக இருக்கவேண்டும், உங்கள் உடலமைப்புக்கும், உங்கள் நிறத்திற்கும் தகுந்த ஆடைகளை தெரிவு செய்யுங்கள்.

கீழே பாலிவுட் நட்சத்திரங்கள் கலக்கலான திருமண ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன,

தியா மிர்ஷா

தனது திருமண வரவேற்புக்கு பிரபல மொடலான தியா மிர்ஷா க்ரீம் மற்றும் ஆரஞ்சு நிற லெஹெங்கா அணிந்திருந்துள்ளார், மேலும் சிகைக்கு பெரிதாக ஒப்பனை எதுவும் செய்துகொள்ளாமல், பச்சை நிறத்தில் அணிகலன்கள் அணிந்துள்ளார்.

இந்த அலங்காரம் அவரது முகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது,

மிரா ராஜ்புத்

மிகவும் நேர்த்தியான Embroidered டிசைன்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட பிங்க நிற லெஹெங்கா அணிந்திருக்கிறார், மேலும் இந்த ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிகலன்களையும் அணிந்திருப்பது இன்னும் அழகாக காட்டியது.

இந்த ஆடையை Anamika Khanna வடிவமைத்துள்ளார்.

கரீனா கபூர்

மணிஷ் மல்கோத்ரா வடிவமைத்த Merun Colour லெஹெங்கா அணிந்து மிகவும் அழகாக காட்சியளிக்கிறார் கரீனா, இந்த ஆடை அவரை மிகவும் தைரியமாகவும், அழகாகவும் சித்தரிக்கிறது,

பிபாஷா பாசு

தனது திருமணத்திற்கு சிகப்பு நிற லெஹெங்காவை அணிந்து சிகப்பு பழம் போல காட்சியளிக்கிறார் பிபாஷா. இதில் அவரது நகை அலங்காரம் மற்றும் அவரது கண்களுக்கு அவர் கொடுத்துள்ள ஒப்பனை மிகவும் அழகாக காட்டுகிறது.

அசின்

அபுஜானி வடிவமைத்த pastel லெஹெங்காவை அணிந்து, அதற்கு ஏற்றார்போலஅணிகலன்களை அணிந்துள்ளதால் பார்ப்பதற்கு எளிமையாகவும் அதே சமயம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

Loading...
2952
-
Rates : 0