வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய உதவும் சில பழங்கால இயற்கை வழிகள்!

Loading...

140520160004

கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் வயிற்றில் வளரும் குழந்தை என்னவாக இருக்கும் என்று யோசித்து, என்ன பெயர் வைக்கலாம் அல்லது என்னவெல்லாம் வாங்கலாம் என்று கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றியே எப்போதும் சிந்தித்தவாறு இருப்பார்கள்.

ஆனால் இந்தியாவில் பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடைபெறுவதால், வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்து கொள்வது ஓர் குற்றம் என்று இந்திய அரசு தடை செய்துள்ளது.

என்ன தான் ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று இருந்தாலும், என்ன குழந்தையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஓர் ஆவல் இருக்கும். உங்களுக்கும் அந்த ஆவல் இருந்தால், பழங்காலத்தில் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதைக் கண்டறிய பின்பற்றிய வழிகள் என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

ஐரோப்பிய முறை

 


15 ஆம் நூற்றாண்டில் பின்பற்றப்பட்டு வந்த ஓர் ஐரோப்பிய முறை தான், கர்ப்பிணிகளின் நடையை வைத்து குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது. எப்படியெனில், கர்ப்பிணிகள் நடக்க ஆரம்பிக்கும் போது, முதலில் வலது காலை எடுத்து வைத்து நடந்தால் ஆண் குழந்தை எனவும், இடது காலை எடுத்து வைத்து நடந்தால் பெண் குழந்தை வளர்வதாகவும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்

உப்பு சோதனை

 

இந்த முறையின் படி, கர்ப்பிணிகள் தூங்கும் போது, அவர்களின் தலையில் சிறிது உப்பைத் தூவி விட வேண்டும். பின் அவர்கள் எழுந்ததும், முதலில் ஆண் சம்பந்தப்பட்ட வார்த்தையை பயன்படுத்தினால் ஆண் குழந்தையும், பெண் சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பேசினால் வயிற்றில் பெண் குழந்தை இருப்பதாகவும் ஓர் நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

டேனிஷ் முறை

 


டேனிஷ் முறையின் படி, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, கணவனின் உடல் எடை அதிகரித்தால், மனைவியில் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று அர்த்தமாம்.

கர்ப்பிணிகளின் ஆசை

 

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு இனிப்பு பதார்த்தங்களின் மேல் ஆசை எழுந்தால், பெண் குழந்தை எனவும், அதுவே உப்பு அல்லது புளிப்பு பதார்த்தங்களின் மேல் ஆசை எழுந்தால் ஆண் குழந்தை என்ற நம்பிக்கை கிராமப் பகுதியில் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.

வயிற்றின் வடிவம்

 


கர்ப்பிணிகளின் வயிறு கீழிறங்கி இருந்தால், ஆண் குழந்தை உள்ளதாகவும், அதுவே சற்று பெரியதாக இருந்தால் பெண் குழந்தை வளர்வதாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். முக்கியமாக இந்த நம்பிக்கையின் படி நிறைய பேருக்கு குழந்தை சரியாக பிறந்ததுள்ளது என்றால் பாருங்கள்

தங்க மோதிர முறை

 

இந்த முறையின் படி, கர்ப்பிணிகள் நேராக படுத்துக் கொண்டு, ஒரு நூலில் தங்க மோதிரத்தைக் கட்டி, வயிற்றின் மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரம் பக்கவாட்டில் நகர்ந்தால் ஆண் குழந்தை, அதுவே வட்ட சுழற்சியில் சுழன்றால் பெண் குழந்தை. வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

காலைச் சோர்வு

 


சில பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அளவில் காலைச் சோர்வை சந்திப்பார்கள். அப்படி காலைச் சோர்வை அதிகம் சந்தித்தால் பெண் குழந்தை என்று அர்த்தமாம். அதுவே காலைச் சோர்வை அதிகம் சந்திக்காமல் இருந்தால் ஆண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்

Loading...
30191
-
75%
Rates : 12