அழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்

Loading...

201607010958057173_3-exercises-for-women-health-and-beauty_SECVPF.gif

குடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் பெண்களில் பலர் பெரும்பாலும் தங்கள் உடல் மீது அக்கறை செலுத்த தவறிவிடுகின்றனர். அதனால் விரைவிலே அவர்களது கட்டுடல் காணாமல் போய் விடுகிறது. உடல் பருத்து விடுகின்றார்கள். அதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் கெட்டு போகிறது.

உடற்பயிற்சி மூலம் கட்டுடலும், ஆரோக்கியமும் பெறலாம். அதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியதில்லை. சில நிமிடங்கள் போதும்.

பயிற்சி 1 – ஜாகிங் :

நேரம் 10 நிமிடங்கள் :செய்யும் முறை :

பெண்கள் ஞாயிற்றுகிழமை ஓய்வை விரும்பியபடி இன்பமாகவே உடல் சோர்வுக்கு ஏற்ப ஓய்வாகவோ கழித்து விடுகிறார்கள். திங்கட்கிழமை விடிந்ததும்பரபரப்பு தொற்றி கொள்கிறது. அந்த பரபரப்பு அந்த நாள் முழுவதும் மட்டுமல்ல, அந்த வாரத்தையே சலிப்பாக்கிவிடுவதுண்டு.

ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலக வேலைக்கு கிளம்பும் போது அலுவலகத்தில் வேலை குவிந்து கிடக்கும். திரும்பி வீடு வரும் போது இங்கேயும் ஓய்வற்ற வேலை இருக்கும். என்ற சிந்தனைகளே ஓடிக்கொண்டிப்பதால் பெண்களின் மனம் அவர்களது உடலை நினைத்து பார்க்காது.

இப்படி நொந்து போகும் நிலையில் இருந்து பெண்களை விடுவித்து அவர்களுக்கு புத்துணர்ச்சியும், உற்சாகமும் தருவது ஜாகிங் பயிற்சி.

எத்தனையோ வேலைகள் உங்கள் நேரத்தை விழுங்குகிறது. இதற்கிடையில் 10 நிமிடங்களை ஜாகிங் பயிற்சிக்கு ஒதுக்கினாலே போதும். மேற்சொன்ன வேலை பரபரப்பு குடும்ப பிரச்சனைகள், சலிப்பு, அலுப்பு எல்லாம் பறந்து விடும்.

ஜாகிங் பயிற்சி குதிகால் பிடரியில் பட வியர்க்க விறுவிறுக்க ஓடத் தேவையில்லை.

மெதுவான ஓட்டம்த்தில் குதித்து செல்லுங்கள். இந்த அளவிலான துள்ளோட்டம்(ஜாகிங்) உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடம் பயிற்சி செய்ய முடியாதவர்கள் 5 நிமிடங்கள் செய்து பழகி மெல்ல மெல்ல நிமிடங்களை அதிகரிக்கலாம்.

பலன்கள் :

துள்ளோட்டம் உடலுக்கு, புத்துணர்ச்சியும் தரக்கூடியது. ஒரே நேரத்தில் கைகள், கால்கள் மற்றும் அனைத்து உடல் உறுப்புகளும் இயக்கம் பெறுவதால் உடல் வலிமை பெறும். இதயத்திற்கு வலிமை தரும். இதயத்திற்கு நல்ல பயிற்சி கிடைப்பதால் நாடித்துடிப்பு சீராகும். இதய பாதிப்புகளை தடுக்கும். சுரப்பிகளை தூண்டி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

கடிகார பாய்ச்சல் :

நேரம் 3 நிமிடம் : செய்யும் முறை :

புத்துணர்ச்சி தரும் பயிற்சி இது. சோர்வுற்றிருக்கும் உடலை லேசாக நெட்டி முறித்து வளைத்து கொடுப்பதம் மூலம் சுறுசுறுப்பாக்குகிறது. இந்த பயிற்சி. முதலில் இருகால்களையும் சேர்த்து வைத்து நின்று முன்புறமாக குனிந்து தரையையோ, பாதத்தின் விரல் நுனியையோ தொட்டு பயிற்சி செய்யவும்.

பிறகு கால்களை விரித்து வைத்த நிலையில் வலது கையினால் இடது கால் பெருவிரல் நுனியை வளைத்து தொடவும். அடுத்த கணம் இடது கையினால் வலது கால் விரல் நுனியை தொடவும். இதே முறையில் 3 முதல் 5 நிமிடங்களுக்குள் உங்களால் எவ்வளவு முறை இந்த பயிற்சியை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு செய்யலாம். வேறு சில முறைகளில் கடிகார கோணத்திலும், எதிர் திசையிலும் உடலை வளைத்து நெளித்து இந்த பயிற்சிகளை செய்யலாம்.

பலன்கள் :

வயிறு மற்றும் இடுப்பு தசைகள் நன்கு முறுக்கேறுவதால் பெண்கள் கச்சிதமான உடலமைப்பை பெற முடியும். கணுக்கால் தசை மற்றும் பின்புற தசைகளும் வலிமை பெறும். தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தால் நீண்டகாலம் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

பயிற்சி 3

சுவாசப்பயிற்சி :

நேரம் 10 நிமிடம் : செய்யும் முறை :

தளர்வாக அமர்ந்த நிலையில் சுவாசத்தை முறைப்படுத்துவதே இந்த பயிற்சி. சாதாரண சுவாசித்தலுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடே மூச்சை முழுமையாக உள்ளிழுத்து நிதானமாக வெளியிடுவதாகும். முதலில் தளர்வாக அமர்ந்த நிலையில் வலது நாசித்துவாதத்தை மூடிக்கொண்டு இடது நாசியால் காற்றை உள் இழுக்கவும். எவ்வளவு நேரம் உள் இழுத்தீர்ளோ அதே நேர அளவில் நிதானமாக காற்றை வெளியிடுவது முக்கியம்.

மீண்டும் இதேபோல பத்து பதினைந்து முறை செய்த பின்பு இடது நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு வலது நாசி வழியாக மூச்சை இழுத்து விட வேண்டும். இப்படியே தினமும் 10 நிமிடம் பயிற்சி செய்தால் இதற்கான முழுபலன்களையும் அனுபவிக்க முடியும்.

பலன்கள் :

எளிய பயிற்சியான இது வழங்கும் நன்மைகள் ஏராளம். மனதுக்கு பேரமைதியும், உடலுக்கு அதீத புத்துணர்ச்சியும் தரும். மூளைக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைக்கக் செய்வதால் சுறுசுறுப்பு தொற்றி கொள்ளும். தூய காற்றை சுவாசிப்பதால் நாளடைவில் மேனியும் பொலிவு பெற்று வசீகர தோற்றத்தை அடையலாம்.

ரத்த ஓட்டம் சீராகும். இந்த பயிற்சிகளை கடைப்பிடித்தால் இளமையும், ஆரோக்கியமும் நிச்சயம். மூன்று பயிற்சிகளையும் பின்பற்ற வேண்டுமென்பதில்லை. ஏதேனும் ஒரு பயிற்சியை செய்தாலே நல்ல பலன்களை அடையலாம்.

Loading...
1974
-
66%
Rates : 3