மூன்று நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் சர்க்கரை டயட்!!!

Loading...

maxresdefault

சர்க்கரையை ஒரு நாளைக்கு எவ்வளவு உபயோகிக்கிறீர்கள்? காபியிலோ, பாலிலோ சர்க்கரை போதுமானதாக இல்லை என்று நினைத்து திரும்பவும் போட்டுக் கொள்கிறீர்களா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்குதான். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை மிக குறைந்த அளவே உபயோகிக்க வேண்டும்.
 
ஆனால் நம்மையும் அறியாமல் நாளுக்கு நாள் அதன் அளவை அதிகரித்துவிடுகிறோம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதயும் மீறி அதற்கு அடிமையாகிவிடுகிறோம். இதனால் மெல்ல மெல்ல பின்விளைவுகள் வரும் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?
 
சளி,சைனஸ், தூக்கமின்மை, தலைவலி, இதற்கெல்லாம் நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவும் காரணம். அளவோடு எடுத்துக் கொண்டால் எதுவும் தவறில்லை. ஆனால் சர்க்கரைக்கு அடிமையாகிவிட்டால் பிறகு தலைவலிதான்.
 
நம்மையும் அறியாமல் சர்க்கரை அளவு கூடுவதற்கு இன்னொரு காரணம் தெரியுமா? மார்கெட்டில் கிடைக்கும் இனிப்புப் பொருட்கள்தான். கடைகளில் கிடைக்கும் சாக்லேட், பேக் செய்து விற்கப்படும் பழச் சாறு வகைகள், குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள் இவைகள் தான் காரணம். விற்க வேண்டுமென்பதற்காக இனிப்புகளை தயவு தாட்சணமின்றி வாரி வழுங்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்.
 
இவை மெல்ல மெல்லமாக நமது நாவின் ருசிக்கு பழகிப் போய் அதற்கு அடிமையாகிவிடுகிறோம். உடலுக்கு தீங்கு விளைவிக்காத இனிப்புகள் செயற்கை கலக்காத இயற்கையான ப்ரஷான பழச்சாறுகள், மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழவகைகள் நம் உடலில் முழுவதும் செரிமானதிற்கு உட்பட்டு தீங்கு விளைவிப்பதில்லை. சர்க்கரை எவ்வாறு உடல் பருமனுக்கு காரணம்? சர்க்கரை கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்தது. நாம் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் உடலில் செரிமானம் ஆகி சக்தியை தருகிறது.
 
கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருக்கும் போது,அது உடலில் கொழுப்பாக சேமித்துவைக்கப்பட்டு எப்போழுதெல்லாம் எனர்ஜி தேவையோ, அப்போதெல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது.
 
அதே போல் சர்க்கரையும் குளுகோஸாக மாற்றப்பட்டு, இவ்வகையில் சேமித்து பின் உபயோகப்படுத்தபடுகிறது. இதுதான் நம் உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றம். ஆனால் செயற்கை முறையில் கலக்கப்படும் சர்க்கரைகள்,குடலிலுள்ள நல்ல பேக்டீரியக்களின் செயல்களை மாற்றுகிறது. (அவைகள்தான் செரிமானத்திற்கு உதவிபுரிபவை).
 
இதனால் சர்க்கரை உடலிலேயே தங்கி இரத்தத்தில் அளவை கூட்டுகிறது. இது தொடர்ந்தால்,சர்க்கரை வியாதி, உடல் பருமனில் போய் நிற்கும். சர்க்கரை அளவு அதிகரித்தால், வயிறு, இடுப்பு, தொடை ஆகியவற்றில் தங்கி உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரையின் அளவை மூன்றே நாட்களில் குறைப்பது எப்படி? அளவுக்கு அதிகமான சர்க்கரையின் அளவை நமது தீவிர உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் நீக்கலாம். கீழே கொடுக்கப்படுள்ள பத்தியங்களை பயன்படுத்தி, சர்க்கரையின் அளவை நீங்கள் வெளியேற்றலாம்.
 
முதல் நாள்:
 
காலை-வேக வைத்த ஓட்ஸ்,பெர்ரி பழ வகைகள்,,ஊற வைத்த பாதாம் இரண்டு.(அல்லது)வேக வைத்த பசலைகீரையுடன் முட்டை பொறியல் முன்பகல்-ஒரு கப் நிறைய நட்ஸ் வகைகள் மதியம் -சிக்கன் சூப்புடன் ஏதேனும் பழச் சாறு,ஒரு கப் வேக வைத்த கேரட்,பீட்ரூட் மற்றும்,சில பாதாம் இரவு-பொரித்த மீன்,ஒரு கப் வேக வைத்த பீன்ஸ் (அல்லது) வறுத்த புருக்கோலி,மஷ்ரூம்.
 
இரண்டாவது நாள்:
 
வேக வைத்த ஓட்ஸ்,பெர்ரி பழ வகைகள், ஊற வைத்த பாதாம் இரண்டு (அல்லது) வேக வைத்த பசலைகீரையுடன் முட்டை பொறியல் முன்பகல்- ஒரு கப் நிறைய நட்ஸ் வகைகள். மதியம் – சிறிது ஆலிவ் என்ணெயில் வறுத்த சீமை சுரைக்காய் பொறியல்,முட்டைகோஸ்,கேரட்,கேப்சிகம்,ஆகியவற்றில் மிளகுத் தூள் கலந்து, எலுமிச்சி சாறு தூவி செய்த சாலட் இரவு- ஆவியில் வேகவைத்த எல்லா காய்கறிகள் அல்லது, முளைக் கட்டிய தானிய வகைகளில் செய்த சாலட்.
 
மூன்றாவது நாள்:
 
காலை – வேக வைத்த ஓட்ஸ், பெர்ரி பழ வகைகள், ஊற வைத்த பாதாம் இரண்டு (அல்லது) முள்ளங்கி சாலட், ஆம்லெட் முன்பகல் – ஒரு கப் நிறைய நட்ஸ் வகைகள் மதியம் – எண்ணையில்லாமல் செய்த சிக்கன் ரோஸ்ட், அல்லது ஆலிவ் எண்ணெயில் செய்த சிக்கன் ரோஸ்ட் , அதன் மேல் வெங்காயம், ஆலிவ் தழைகளை போட்டு சாப்பிடலாம்.
 
உடலிலுள்ள சர்க்கரையின் அளவை நீக்க பானங்கள்:
 
சர்க்கரையின் இடத்தை பழங்களைக் கொண்டும்,பழச் சாறுகளைக் கொண்டும் நிரப்பலாம். இதனால் கணிசமாக மூன்று நாட்களில் சர்க்கரையின் அளவு குறையும். பழங்கள் கலந்த நீர்: பெர்ரி வகைகள்,ஆரஞ்சு இவற்றுடன் புதினா, ரோஸ்மெரி ஆகியவற்றை சிறிய துண்டுகளாகச் செய்து,ஒரு ஜாரில் நீருடன் கலந்து நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தேவைப்படும்போது அவ்வப்போது அந்நீரினை குடிக்கலாம். தேநீர்: சர்க்கரை இல்லாத ஹெர்பல் தேநீர் அருந்தலாம். காபி: பால் மற்றும் சர்க்கரை கலக்காத காபியை பருகுங்கள்.
 
இந்த டயட்டை பின்பற்றும்போது நினைவில் கொள்ள வேண்டியவை:
 
சர்க்கரையை நினைத்தும் பார்க்கக் கூடது. மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.உதாரணத்திற்கு பிரெட்,கோதுமை,ராகி,பயிறு வகைகள் ஆலிவ் எண்ணெயையே சமையலுக்கு பயன்படுத்துங்கள் பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள் அதிகமாக காய்கறிகளையும்,பழ வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இது நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் நிறைய நீர் அருந்துங்கள்.
 
இந்த மூன்று நாள் பத்தியங்கள் முடிந்தவுடன் நீங்களே உங்கள் உடலில் நடக்கும் மாற்றத்தினை உணர்வீர்கள்,வழக்கித்திற்கு மாறாக சுறுசுறுப்புடன், சரியான எடையுடன் காணப்படுவீர்கள். அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது சரியான முறையில் சரிவிகித உணவுகளை எப்போதும் பின்பற்ற வேண்டும். நல்ல டயட்டீஷியன் அல்லது மருத்துவரை நாடுங்கள். இது நூறாண்டு, நோய் நொடி இல்லாமல் முதுமையிலும் இன்பமான வாழ்க்கையை வாழ வழிதரும்.
Loading...
26749
-
83%
Rates : 6