பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Loading...

201608241313343379_Famous-director-SA-Chandrasekar-admit-in-hospital_SECVPF.gif

சட்டம் ஒரு இருட்டறை’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘நீதிக்கு தண்டனை’, ‘ரசிகன்’ உள்ளிட்ட பல புரட்சிகரமான படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் நடிகர் விஜய்யின் தந்தையுமாவார். கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு ‘நையப்புடை’, ‘கொடி’ ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று திடீரென கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்கையில், கேரள மாநிலம் குமரகம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், இன்று ஓட்டல் மாடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது காலில் காயம் ஏற்படவே, உடனடியாக கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Loading...
1053
-
Rates : 0