தொப்பை குறைய இதனை பின்பற்றுங்கள்!

Loading...

625.0.560.350.16,,0.300.053.800.668.160.90

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான்.

இத்தகைய தொப்பையை குறைப்பது மிகவும் எளிது.

அதற்கான வழிகளை நாம் இப்போது பார்க்கலாம்!

உப்பு

நம் உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக உப்பு நம் உடலில் சேரும் போது தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக உடம்பில் தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

தண்ணீர்

தினமும் காலையில் எழுந்ததும் 7 முதல் 8 டம்ளர் வரை தண்ணீர் குடித்து வர வேண்டும்.

இதனால் உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடலின் வறட்சியை தடுக்கிறது.

மேலும் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெள்ளியேற்றப்பட்டு தொப்பையை குறைக்கிறது.

தேன்

தொப்பை உண்டாவதற்கு சர்க்கரையும் ஒரு காரணமாக உள்ளது.

எனவே சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால் தொப்பை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

பூண்டு

தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், உடலின் ரத்த ஓட்டம் சீராகி, கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடல் எடை மற்றும் தொப்பை குறையும்.

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிகமாக இருப்பதால், இவை இன்சுலின் சுரப்பை சீராக்கி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து, தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

எலுமிச்சை சாறு

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் செய்து அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், சீரான உடலமைப்பை பெறலாம்.

சால்மன் மீன்

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும்.

ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

Loading...
31140
-
85%
Rates : 20