ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடிக்க வேண்டிய ஜூஸ்

Loading...

b b b b

தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஒரு சொட்டு ரத்தம் ஊறும்.

மேலும் ஆப்பிள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆப்பிளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பெக்டின் அதிகம் இருப்பதால் அது உடல் எடையை குறைத்து கட்டழகுடன் வைத்திருக்க உதவுகிறது.

அதே போன்று ஆப்பிள் வகையை சேர்ந்த பேரிக்காயும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் ஆப்பிளில் உள்ளதை விட விட்டமின் ஏ பேரிக்காயில் அதிகமாக இருக்கிறது.

இந்த ஆப்பிளையும் பேரிக்காயையும் சேர்த்து ஜூஸ் போட்டு குடித்தால், இரட்டிப்பு ஆரோக்கியம் கிடைக்கும்.

 

தேவையானவை: ஆப்பிள் 1, பேரிக்காய் சிறியது -2.

செய்முறை

ஆப்பிள், பேரிக்காய்களை தோல் சீவி விதை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது. தேவை எனில் சிறிது சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்
  • விட்டமின் ஏ,சி,கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் நிறைய உள்ளன.
  • தொடர்ந்து இந்த ஜூஸ் குடித்துவந்தால், தோல் பொலிவு அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நோய்கள் அண்டாது.
  • இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. இவர்கள் சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.
  • சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
  • குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.
Loading...
1248
-
Rates : 0