சின்னத்திரை நடிகருடன் இணையும் ரம்யா நம்பீசன்

Loading...

201609051038221183_Ramya-Nambesan-joint-with-tv-actor_SECVPF.gif

சின்னத்திரை தொடர்களில் நடிகராகவும், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வர்ணையாளராகவும் பணியாற்றிய கவின் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக தடம்பதிக்க உள்ளார். இவர் நடிக்கும் அந்த படத்திற்கு ‘நட்புன்னா என்னானு  தெரியுமா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த தலைப்பு ‘தளபதி’ படத்தில் ரஜினியின் நட்பை மம்முட்டி சந்தேகப்படும்போது, ரஜினி பேசும் வசனம். அந்த வசனத்தையே இந்த படத்தின் தலைப்பாக மாற்றியுள்ளனர். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ராஜு, வெங்கி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகுமார் என்பவர் இயக்குகிறார். தரண் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

Loading...
9671
-
Rates : 0