சரத்குமாரை சரியான நேரத்தில் பழி வாங்கிய விஷாலின் ராஜதந்திரம்

Loading...

நடிகர்-விஷால்-டீமுக்கும்-நடிகர்-சங்க-நிர்வாகிகள்-சரத்குமார்-300x171

நடிகர் விஷால் டீமுக்கும், நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோருக்கும் லடாய் என்பது ஊருக்கே தெரிந்த விவகாரம். ஆனாலும், பொது இடங்களில் அதைக் காட்டிக் கொள்ளாமல் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி நடிகர் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர்கள் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதாவது, தற்போது ஊடகங்களும், செய்திதாள்களும் காவிரி நீர் தொடர்பாக, கர்நாடகாவில் நடைபெறும் வன்முறைகளை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது, உறுப்பினர் நீக்கம் பற்றி சரத்குமாரோ, ராதாரவியோ ஊடகங்களிடம் பேசி பரபரப்பை உண்டாக்க முடியாது.

எனவே இதுதான் சரியான நேரம் என்று விஷால் பழிவாங்கியுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றனர்.

என்ன ஒரு ராஜதந்திரம்…

Loading...
3523
-
Rates : 0