தொப்பையை குறைக்கும் கும்பகாசனம்

Loading...

201609141143041864_Reducing-belly-kumbhakasana-Plank-Pose_SECVPF.gif

 

செய்முறை :
முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நேர் செய்யவும்.
தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருத்தல் அவசியம். கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி கொள்ளவும்.சுவாசத்தை உள்ளடக்கித் தலையை உயர்த்தி நேராகப் பார்க்கவும். இது இறுதி நிலை. 15 விநாடிகள் இதில் நிற்கவும். சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி ஆரம்ப நிலைக்கு வரவும். 5 – 7 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.
பயன்கள்  :
நமது நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி சமன் செய்கிறது.
கை, தோள்பட்டை மற்றும் பின்முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது.
Core muscle என சொல்லப்படும் முக்கிய தசைகளை வலுவடையச் செய்கிறது.
வயிற்று தசைகள் இறுக்கப் பெறுவதால் தொப்பை குறைய உதவுகிறது.
Loading...
6770
-
100%
Rates : 1