இதயத் துடிப்பு நிற்கப் போகிறது: ஆபத்து ஆபத்து

Loading...

625.0.560.350.160.300.053.80nkjkju0.668.160.90

 

உப்பு இல்லாத பண்டம் குப்பையில் என்ற பழமொழியின்படி உப்பு இல்லாத பண்டமாக இருந்தாலும், உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளாக இருந்தாலும் அந்த இருவகை உணவுகளையுமே குப்பையில் போட்டு விட வேண்டும் என்பதே இந்த பழமொழியின் கருத்தாகும்.

நமது அன்றாட உணவில் உப்பும், காரமும் அதிகமாக சேர்த்து சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்து வருகின்றது.

ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி நாம் இன்றளவும் தெரிந்துக் கொள்ளாமல் இருந்து வருகின்றோம்.

மேலும் இது குறித்து இந்தியா ஸ்பென்ட் ஆய்வு நிறுவனம் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போது, தாங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் அதிக அளவு உப்பு மற்று காரம் சேர்த்து சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை 119 சதவீதமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்பதை கருதி, மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

உணவில் அதிக உப்பு மற்றும் காரம் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விபரீதம்
  • நமது அன்றாட உணவில் உப்பு, காரம் மற்றும் அதிக கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வருவதால், 30 வயதுக்கு மேல் இதநோய்கள் தாக்கப்பட்டு, மரணம் அடையும் சூழ்நிலைகள் ஏற்படுகின்றது.
  • ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்ற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிடுவதால், அதில் உள்ள உப்புகள் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் கலந்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.
  • உப்பு மற்று சர்க்கரையின் அளவை அதிகமாக நாம் உட்கொள்வதால், ஹைபர்டென்சன் எனப்படும் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயத்தின் பாதிப்பை அதிகமாக்குகிறது.
  • பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நீரிழிவு நோய்கள்:, காசநோய்கள், மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட்டு மரணத்திற்கு ஆளாகின்றார்கள்
Loading...
2376
-
Rates : 0