வீட்டை விட்டு ஓடிய நடிகை தேவயானி: யாருக்காக தெரியுமா

Loading...

625.0.560.350.160.300.053.800.668.160.90

தமிழ் சினிமாவில் என்றென்றும் மறக்க முடியாத காதல் தேவதை தேவயானி.

கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களுக்கு மத்தியில், கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் மக்களை கிரங்கடித்தவர்.

இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டாலும், இவரது காதல் திருமணம் சில கரடு முரடான பாதைகளை சந்தித்துள்ளன.

விண்ணுக்கும் மண்ணுக்கும் மற்றும் சூரிய வம்சம் படத்தினை ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்தபோதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

தேவயானியின் தந்தை மும்பையை சேர்ந்தவர். அம்மா ஒரு மலையாளி ஆவார். தேவயானியின் காதல் விவகாரம் இவரது வீட்டிற்கு தெரிவித்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடைசி வரை இவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவரை வீட்டுக்குள் சிறை வைத்துள்ளனர் இவரது குடும்பத்தார்.

ஆனால், ராஜ்குமாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தேவயானி, ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் சுவரை ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

அந்த அளவுக்கு, ராஜ்குமார் மீது அதீத காதல் கொண்டுள்ளார். தேவயானி ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டது அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

திருமணம் முடிந்த பின்னர் கூட இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு, தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர்தான் குடும்பத்தினர் இவர்களோடு உறவாட ஆரம்பித்தார்கள்.

தமிழ் சினிமாவில் காதல் தேவதை மட்டுமின்றி, நிஜத்திலும் இவர் காதல் தேவதை தான்

Loading...
27631
-
66%
Rates : 3