மதிப்புக்கூட்டலில் மகுடம்! – ஆண்டுக்கு ரூ.20 லட்சம்… எலுமிச்சைச் சாறு… கிரீன் காபி

Loading...

p28b

ந்தக் கவிதை வரிகள் தன்னம்பிக்கைக்கான ஆகச் சிறந்த உதாரணம். ‘விளை பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு இல்லை’ என முடங்கிப்போகாமல், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது அதிக வருமானம் கிடைப்பது உறுதி. இதைப் பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூரைச் சேர்ந்த செந்தில். தனது தோட்டத்தில் விளையும் எலுமிச்சை மற்றும் காபி இரண்டையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார், இவர்.

பழனி-கொடைக்கானல் சாலையில், முப்பத்து மூன்றாவது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ‘சவரிக்காடு நாற்பது ஓடை’ பேருந்து நிறுத்தம் அருகேதான் இருக்கிறது, செந்திலின் மலைத்தோட்டம்.

மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலையில் அதிகாலையில் பயணம் செய்யும் அனுபவமே அலாதியானது. சாலையின் ஒருபுறம் மலைப்பாறைகளும், மறுபுறம் ஆழமான பள்ளத்தாக்குமாகத் தொடர்ந்த பயணத்தின் முடிவில் செந்திலின் தோட்டத்தை அடைந்தோம். நுழைவுவாயிலில் நின்று நம்மை வரவேற்றவர், வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மலையின் இடுப்புப் பகுதியில் கட்டியுள்ள அந்த வீட்டின் முன்பகுதியில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தால் கண்ணெதிரே விரிகிறது, பசுமையான பள்ளத்தாக்கும், மலைகளுமான அற்புதக் காட்சி. இயற்கையின் எழிலை ரசித்துக் கொண்டே செந்திலிடம் பேசினோம்.

பணம் வேண்டாம்… வனம் போதும்!

“எனக்குச் சொந்த ஊர் திருப்பூர். அங்க டெக்ஸ்டைல் பிசினஸ் இருக்கு. தாத்தா காலத்துல விவசாயம்தான் குடும்பத் தொழிலா இருந்தது. அப்பா காலத்துல விவசாயத்துல இருந்து விலகியாச்சு. ஆனா, எனக்குச் சின்ன வயசுல இருந்தே தோட்டம், காடுன்னா ஒரு பிரியம். நாமளே சம்பாதிச்சுத் தோட்டம் வாங்கி விவசாயம் செஞ்சுடணும்னு நினைப்பு இருந்துகிட்டே இருந்துச்சு. அந்த நேரத்துல, இந்த இடம் தோதா அமையவும் வாங்கிட்டேன். இது மொத்தம் 40 ஏக்கர் பூமி. கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேர்த்தேன். இதுல எலுமிச்சை, காப்பி இருக்கு. அதுபோக பலவிதமான காட்டு மரங்கள் நெறைய இருக்கு. எனக்கு முன்னாடி இந்தத் தோட்டத்தை வெச்சிருந்தவங்களும் எந்த ரசாயனமும் போட்டதில்லை. நானும் எதுவும் போடுறதில்லை. நிலத்துல ரசாயனம் போடக்கூடாதுங்கிறதுல நான் வைராக்கியமா இருக்கேன். முழுமையான இயற்கை விவசாயப் பண்ணைக்கான சான்றிதழும் வாங்கியிருக்கேன்.

பொதுவா காப்பித் தோட்டத்துல நெருக்கமா மரங்களை வெச்சிக்க மாட்டாங்க. நான் இந்த இடத்தை வாங்கும்போது மரங்கள், புதர்கள் அடர்ந்து வனமா இருந்துச்சு. அதுக்குக் கீழதான் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு காப்பி இருந்துச்சு. மரங்களை வெட்டி, புதர்களை அழிச்சு முழுமையா காப்பி நடலாம்னு எல்லோரும் ஆலோசனை சொன்னாங்க. ஆனா, எனக்கு அதுல உடன்பாடு இல்லை. மரங்களை வெட்டுறதுக்கு மனசு வரலை. அதனால, வர்றளவுக்குக் காப்பி வந்தா போதும்னு மரங்களை வெட்டாம விட்டுட்டேன். பக்கத்துத் தோட்டம், முன்னாள் எம்.எல்.ஏ குப்புசாமியோடது. அவரும், ‘நான் மரத்தை வெட்டித் தோட்டத்தை வீணடிச்சுட்டேன். நீ மரங்களை வெட்டிடாதே’னு என்னைப் பாக்கும்போதெல்லாம் சொல்வாரு. இதையெல்லாம் வெட்டியிருந்தா இன்னும் நல்லா விவசாயம் பண்ணியிருக்கலாம். ஆனா, எனக்கு அதுல உடன்பாடு இல்லங்கிறதால, இருக்கிறதைப் பராமரிச்சுட்டு இருக்கேன்” என்ற செந்தில், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

வனத்தோட்டம்!

தோட்டத்துக்குள் ஆங்காங்கு நாட்டுக் கொய்யா மரங்களில் காய்கள் காய்த்துத் தொங்கின. மரங்களுக்கு அடியில் ஏராளமான பழங்கள் உதிர்ந்துகிடந்தன.

“இந்த கொய்யா மரங்கள்ல விளையுற பழங்களை நாங்க பறிச்சு விற்பனை செய்றதில்லை. இந்தப் பழத்தை சரியான நேரத்துல பறிக்காம விட்டா, உள்ளுக்குள்ள ஒரு புழு வந்திடும். அதனால இதை விற்பனை செய்றதில்லை. வீட்டுத் தேவைக்கு மட்டும் கொஞ்சமா பறிச்சுக்கிட்டு மத்ததை அப்படியே விட்டிடுவோம். இங்க இருக்கற பறவைங்களுக்கு இது நல்ல உணவா இருக்கு” என்ற செந்தில், பாறைகளின் ஊடே சென்ற ஒற்றையடிப் பாதையில் நம்மை அழைத்துச் சென்றார்.

பலா, சில்வர் ஓக், அரச மரம், ஆல மரம், இலவ மரம், சந்தனம், தேக்கு, சிலவாகை, காட்டு மரங்கள் என அடர்ந்து வளர்ந்திருந்தன. இடையிடையே, வெயில் கிடைக்கும் இடங்களில் எலுமிச்சைச் செடிகளும், காபிச் செடிகளும் இருந்தன.

“இந்தப் புதர்களை அழிச்சு, மரங்களை வெட்டி தோட்டத்தைத் திருத்துனா, நல்ல வருமானம் தர்ற பணத்தோட்டமா மாறிடும். ஆனா, நான் இதை வனத்தோட்டமா பராமரிக்கத்தான் விரும்புறேன். இன்னும் புதுசு புதுசா செடிகளை நட்டுட்டு வர்றேன். மழைத்தண்ணி ஒண்ணுதான் இங்க நீர் ஆதாரம். சமவெளிப் பகுதியில செய்ற மாதிரி பாசனம் செய்ய முடியாது. அதனால இயற்கையாகவே எல்லாம் இருக்கட்டும்னு விட்டுட்டேன். எலுமிச்சை, காப்பி செடிகளுக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை களை வெட்டுவோம். வெட்டுற களையையும் அங்கயே போட்டு மட்க வெச்சிடுவோம். அது நல்ல உரமா மாறிடுது. அதுபோக, வருஷத்துக்கு ஒருமுறை ஆட்டு எரு வெப்போம். வேற எந்த உரமோ, பூச்சிக்கொல்லியோ தெளிக்கிறதில்லை. இந்த நாப்பது ஏக்கர் நிலத்துக்குள்ள 20 ஆயிரம் எலுமிச்சை, 25 ஆயிரம் காப்பி செடிகள்தான் இருக்குது. மத்தது எல்லாம் மரங்கள்தான்.

விருப்பாட்சி வாழை!

மலை வாழையில விருப்பாட்சி ரக வாழையை இந்தப் பகுதியில அதிகமா நடுவாங்க. ஏக்கர் கணக்கெல்லாம் கிடையாது. எண்ணிக்கைக் கணக்குதான். நான் ஆரம்பத்துல 5 ஆயிரம் வாழை வரை போட்டேன். ஆனா, இலைக்கருகல் நோய் தாக்குதல் வந்து ஏகப்பட்ட வாழை மரங்கள் அழிஞ்சு போச்சு. அதுமட்டுமில்லாம காட்டுப்பன்னிகளும் வாழையைச் சேதம் பண்ணிடுது. அதனால, எண்ணிக்கையைக் குறைச்சிக்கிட்டேன். போன வருஷம் வாழை நடலை. இந்த வருஷம் நடலாம்னு இருக்கேன். வாழைக்கு எந்தப் பண்டுதமும் பார்க்கத் தேவையில்லை. பாசனமும் செய்யமாட்டோம். மழைத் தண்ணிக்கே வளர்ந்து வந்துடும். ஆட்டு எரு மட்டும் கொடுத்தா போதும். 13 மாசத்துல அறுவடைக்கு வந்துடும். நல்ல தரமா விளைஞ்ச வாழைத்தார்ல 300 முதல் 400 காய்கள் வரைக்கும் இருக்கும். ஒரு காய் 8 ரூபாய்ல இருந்து 10 வரைக்கும் விலை போகும். ஒரு தார், 2 ஆயிரத்து 500 ரூபாய்ல இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். குறைஞ்சபட்சமா தார் 2 ஆயிரம் ரூபாய் விலை போனாக்கூட, ஆயிரம் மரம் வெச்சிருந்தா வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய் சம்பாதிச்சிடலாம். மலை விவசாயத்தில், விவசாயிகளை இன்னும் உயிர்ப்போட வெச்சிருக்கறதே இந்த மலைவாழைதான்” என்ற செந்தில், நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

ஆண்டுக்கு ரூ.20 லட்சம்!

“நாம என்னதான் மனத் திருப்திக்காக விவசாயம் செஞ்சாலும், வருமானம்னு ஒண்ணு வந்தாத்தானே தொடர்ந்து செய்ய முடியும். இந்த 40 ஏக்கர் நிலத்துல இருந்து எலுமிச்சை, காப்பி, வாழை, பலானு எல்லா வருமானத்தையும் சேர்த்தா வருஷம் 40 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவுக்குப் போயிடும். மீதி 20 லட்ச ரூபாய் லாபமா நிக்கும். இதுவே என்னைப் பொறுத்தவரைக்கும் மன நிம்மதியான லாபம்தான். ஆனாலும், பல நேரங்கள்ல வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அதனால, என் தோட்டத்தில விளையுற பொருளை, அப்படியே விக்காம மதிப்புக்கூட்டி விக்கலாம்னு சில முயற்சிகள்ல இறங்கினேன். எலுமிச்சைச் சாறு, கிரீன் காப்பி, காய்கறிகள்ல இருக்கற ரசாயனத்தை நீக்குற ‘கிரீன் வாஷ்’னு மூணு பொருளைத் தயாரிச்சு விற்பனை செய்றேன். இதுமூலமா வருமானம் அதிகரிச்சிருக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,செந்தில், செல்போன்: 98422 85553.

மதிப்புக்கூட்டும் மந்திரம்!

தனது தோட்டத்து விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது குறித்துப் பேசிய செந்தில், “எலுமிச்சைக்குப் பல நேரம் விலையே கிடைக்காது. ஒரு கிலோ பத்து ரூபாய் அளவுக்கு விலை சரிஞ்சுடும். அந்த மாதிரி நேரத்துல காய் எடுக்கற கூலிக்கே கட்டாது. அந்த சமயத்துலதான், ‘மதிப்புக்கூட்டி வித்தா என்ன’ன்னு யோசனை தோணுச்சு. பல பேர்கிட்ட ஆலோசனை கேட்டப்பவும், அந்த யோசனையைத்தான் சொன்னாங்க. அதுகுறித்து விசாரிச்சப்போ, ‘சாறு எடுத்து அதுல சர்க்கரையைச் சேர்த்துட்டா கெடாது’னு சொன்னாங்க. ஆனா, எனக்குச் சர்க்கரை போடுறதுக்குப் விருப்பமில்லை. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, சாற்றை அப்படியே கன்டெய்னர்ல அடைக்கிற வழியைத் தெரிஞ்சுகிட்டு அது மாதிரிதான் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில கொடுத்து இந்தச் சாறுல என்னென்ன சத்துக்கள் இருக்கு, எத்தனை நாளைக்குக் கெடாம இருக்குங்கிற  அறிக்கைகளையும் வாங்கிட்டேன். ‘பசுமை விகடன்’ மூலமா தெரிஞ்சுகிட்டு தஞ்சாவூர்ல இருக்கற பயிர் பதனீட்டுக் கழகத்துக்குப் போய், சில தொழில்நுட்பங்களைக் கத்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல சாற்றை நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்தேன். ‘எல்லாரும் நல்லா இருக்கு’னு சொல்லி வாங்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் அதுக்காக ஒரு வெப்சைட் உருவாக்கி அதுல விவரங்களைப் போட்டேன். அது மூலமா வடமாநிலங்கள்ல இருந்து ஆர்டர்கள் வருது. எலுமிச்சைப் பழம் கிடைக்காத சீசன்ல இந்தச் சாற்றைப் பயன்படுத்திக்க முடியும். இப்போதைக்குப் பெரிசா இதைச் சந்தைப்படுத்த முடியலை. அதனால, எலுமிச்சைக்கு விலையில்லாத சமயங்கள்ல மட்டும் சாறு எடுத்து வெச்சுக்கிட்டு அப்பறம் விற்பனை செய்வேன். சாறா விற்பனை செய்றப்போ நல்ல லாபம் கிடைக்கிது. மூணு கிலோ பழத்துல ஒரு லிட்டர் சாறு கிடைக்கும். ஒரு லிட்டர் சாறு 320 ரூபாய்னு (மொத்த விலை) விற்பனை செய்றேன். கிட்டத்தட்ட மார்க்கெட் விலையைவிட 30 சதவிகிதம் கூடுதல் விலை கிடைக்கிது. இதுக்குச் சந்தை வாய்ப்பு சரியா அமைஞ்சா நல்ல லாபம் எடுக்க முடியும்.

கிரீன் வாஷ்!

எலுமிச்சைச் சாற்றை மூலப்பொருளாப் பயன்படுத்தி ‘கிரீன் வாஷ்’னு ஒரு கரைசலையும் தயாரிக்குறேன். இது, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மேல படிஞ்சிருக்கிற ரசாயனப் படிமானங்களைக் கழுவுறதுக்குப் பயன்படுது. வெறும் தண்ணியில இந்தப் படிமானங்களைக் கழுவ முடியாது. இதுக்காகச் சந்தையில சில கரைசல்கள் கிடைக்கிது. ஆனா, அதையும் சில ரசாயனங்களைப் பயன்படுத்திதான் தயார் செய்றாங்க. ஆனா, நான் தயாரிக்கிற கரைசல், இயற்கை முறை. எலுமிச்சைச் சாறு, உப்பு, வினிகர் மூணும்தான் மூலப்பொருட்கள். இதையும் பயிர் பதனீட்டுக்கழக ஆய்வுக்கூடம் மூலமா சோதனை செஞ்சு சான்றிதழ் வாங்கியிருக்கேன்.

உடல் பருமனைக் குறைக்கும் கிரீன் காபி!

காப்பி குறித்து இணையத்துல தேடும்போது, ‘கிரீன் காபி’ குறித்துத் தெரிஞ்சுகிட்டேன். கிரீன் டீ மாதிரி, இதுவும் இப்போ பிரபலமாகிட்டு இருக்கு. அதனால அதையும் தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சேன். காபி போர்டு உள்ளிட்ட இடங்கள்ல இது சம்பந்தமா தெரிஞ்சுகிட்டு அதையும் தயாரிக்க ஆரம்பிச்சேன். வழக்கமா காப்பிக் கொட்டையைக் காய வெச்சு வறுத்துதான் பொடியா அரைப்பாங்க. அதையே பக்குவமா காயவெச்சு, வறுக்காம அரைச்சா அது கிரீன் காபி. வறுக்காத காப்பிக்கொட்டை கல்லு மாதிரி கெட்டியா இருக்கும். அதை அரைக்க தனிப் பல்வரைசர் தேவைப்படும். பல கட்ட முயற்சிக்குப் பிறகு காபி போர்டு சட்ட திட்டப்படி கிரீன் காபியை உருவாக்கினேன்.

இது, உடல் பருமனைக் குறைக்கிறதுல சிறப்பா செயல்படுதுனு டாக்டர்கள் சொல்றாங்க. இப்போதைக்கு இதைத் தெரிஞ்சவங்களுக்குத்தான் விற்பனை செய்திட்டு இருக்கேன். காபி போர்டு நடத்துற கண்காட்சிகள்ல டிஸ்பிளேவுக்கு வைக்கிறாங்க. காபி வாரியம் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. பசுமை விகடன், சென்னையில் நடத்தின நல் உணவுத் திருவிழாவுல என்னோட மதிப்புக் கூட்டின பொருட்களைக் காட்சிக்கு வெச்சிருந்தேன். அங்க நல்ல வரவேற்பு கிடைச்சது.

வழக்கமா இந்தியாவில் விளையுற முதல் தர காப்பியை ஏற்றுமதி செஞ்சிடுவாங்க. உள்ளூர் சந்தைக்கு அது, விற்பனைக்கு வராது. ஆனா, நான் என் தோட்டத்துல விளையுற முதல் தர காபியை அரைச்சு சிக்கரி கலந்து ‘ரெகுலர் காபி’னு பேர் வெச்சு விற்பனை செஞ்சிட்டு இருக்கேன். முதல் தர காப்பிக் கொட்டைகளையும் தனியா பாக்கெட் போட்டு விற்பனை செய்றேன். இது எல்லாமே இயற்கை முறையில விளையிறதாலயும், சிக்கரி உள்ளிட்ட எந்தக் கலப்பும் இல்லாம ஒரிஜினலா கிடைக்கிறதாலயும் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வாடிக்கையாளர்கள் அதிகமாயிட்டு வர்றாங்க” என்றார்.

இலைக்கருகலுக்கு இயற்கை தீர்வு!

மலைவாழையைத் தாக்கும் இலைக்கருகல் நோயை, இயற்கை விவசாய முறையில் எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து, ஜீரோ பட்ஜெட் மலைவாழை விவசாயியான திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணாவிடம் கேட்டோம். “இலைக்கருகல் நோயைப் பொறுத்தவரை ஒரு மரத்தில் தாக்குதல் ஏற்பட்டால், அடுத்தடுத்த மரங்களுக்கு பரவும். இதைத் தடுக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா ஒரு லிட்டர் சூடோமோனஸ், டிரைகோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து, பாதிக்கப்பட்ட மரத்தைச் சுற்றி 5 லிட்டர் ஊற்ற வேண்டும். அதற்குப் பிறகு, ஒரு கைப்பிடி அளவு சுண்ணாம்புத்தூளை மரத்தைச் சுற்றித் தூவிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் அடுத்தடுத்து தோன்றும் இலைகள் புதிதாகத் துளிர்ப்பதுடன், அடுத்த மரத்துக்கு நோயும் பரவாது” என்றார்.

1385
-
Rates : 0